சிறுபான்மை கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம்..?





இன்றய நாட்டின் சூழ்நிலையில், ஒருவேளை ரணில்  பெரும்பாண்மையை நிரூபித்து பிரதமராக வந்தாலும் நாட்டில் சுமூகமான ஆட்சியை அவரால் நடத்த முடியாது. காரணம் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு அவருக்கு இனிமேல் கிடைக்கப்போவதில்லை


அதன் காரணமாக நாட்டின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.


இந்த நிலையில் ரணிலைப் பாதுகாக்க சிறுபாண்மை கட்சிகள் விரும்பபோவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ ஒரு நாடு சீரான வேகத்தில் பயணிப்பதாக இருந்தால் இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது எல்லோரும் அறிந்திருக்கும் உண்மையாகும்.


இந்த நிலையில் சிறுபாண்மை கட்சிகள் ஜனாதிபதியும் பிரதமரும் ஒத்துப்போகும் ஒரு ஆட்சியைத்தான் விரும்பவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். வேண்டா வெறுப்புக்கு தற்போதைய நிலையில் ரணிலை ஆதரித்து அவரை பிரதமராக்கி எதையுமே சாதிக்கமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.


ஆகவே சிறுபாண்மை கட்சிகள் தற்போதைய நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக பயணிக்கும் ஆட்சியோடு இணைவதுதான் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லதாகும். இதனைத்தான் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் விரும்புவார்கள் என்பதே உண்மையாகும்


எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

சிறுபான்மை கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம்..? சிறுபான்மை கட்சிகள் சிந்திக்க வேண்டிய  தருணம்..? Reviewed by Madawala News on October 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.