(படங்கள்) மடவளை பஸார் அல்- முனவ்வராவில் Metric Mela கணித செயற்திட்ட அறிமுகக் கண்காட்சி.


மத்திய மாகாண பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் Metric Mela கணித செயற்திட்டமானது மாணவர்களுக்கு
கணிதப்பாடத்தை விளையாட்டு மூலமாகவும் இலகுவாக கற்கமுடியும் என்பதை நிறுவி, கணிதம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் தரம் நான்கு மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக 16.10.2018 செவ்வாய்க்கிழமை வத்தேகம வலய பாததும்பறை கோட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கான அறிமுகக் கண்காட்சி மடவளை பஸார் அல்-முனவ்வரா ஆரம்பப் பாடசாலையில் விமர்சையாக நடந்தேறியது.

வலயத்திற்கு பொறுப்பான ஆரம்பப் பிரிவு உதவிப்பணிப்பாளர் திருமதி.உடையார் அவர்களின் தலமையில் பிரதம அதிதியாக அல்-ஹாஜ் பௌஸ் ஏ. காதர் (Chairman, Victoria Marketing Pvt LTD) அவர்கள் கலந்து ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன் அல்-முனவ்வரா ஆ.பா, அல்-ஸபா மு.வி, பாரதி த.வி, அல்-அக்ஸா மு.வி மற்றும் ஜாமிஉல் அஸ்ஹர் போன்ற பாடசாலைகளும் பங்களிப்புச் செய்தமையுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பயன்பெற்றனர்.

- பாடசாலை ஊடக பிரிவு-














(படங்கள்) மடவளை பஸார் அல்- முனவ்வராவில் Metric Mela கணித செயற்திட்ட அறிமுகக் கண்காட்சி. (படங்கள்) மடவளை பஸார் அல்- முனவ்வராவில் Metric Mela கணித செயற்திட்ட அறிமுகக் கண்காட்சி. Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.