ஊடகவியலாளர்களின் கேள்விக்கு 'பஞ்ச் டயலாக்' பானியில் பதில் அளித்த அப்துல்லா மஹ்ரூப் MP


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
அன்மைக் காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் குறிஞ்சாக்கேணி
பாலம், மணிக்கூட்டு கோபுரம், வடசல் பாலம், நவீன மீன் சந்த்தை போன்ற விடயங்கள் தொடர்பாக தகவல் திரட்டுவதற்காக உள்ளூர்  ஊடகவியலாளர் குழு ஒன்று நேற்று 2018.10.23 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் கிண்ணியாவில் உள்ள  காரியாலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

மேற்படி ஊடகவியலாளர் குழு பாராளுமன்ற உறுப்பினரிடம் குறிஞ்சாக்கேணி பாலம், மணிக்கூட்டு கோபுரம், வடசல் பாலம், நவீன மீன் சந்தை போன்ற தங்களால் அடிக்கல் நடப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படாமல் இருக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எப்போது ஆரம்பிக்கப் படும்,               
இதற்காக தங்களால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது, என்ன நிலையில் தற்போது உள்ளது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேற்க்கப் பட்டன.

இதற்கு பதில் அளித்த அப்துல்லா மஹ்ரூப் MP “லேட்டாக செய்தாலும் லேட்டஸ்டாக செய்வேன்” என்று பதில் அளித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பல்வேறு தடைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தடைகளை எல்லாம் தக்ர்த்தெரிந்து என்னால் முடியுமான முயற்சிகளை செய்து வருகின்றேன். அணைத்து விடயங்களும் கைகூடி வருகின்றது விரைவில் பணிகள் ஆரம்பிக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீது, மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் ஆகியோரின் பின்னர் 10, 15 வருடங்கள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது பிரதேசத்தில் இருந்திருந்தாலும் அவர்களால் இப்படியான எவ்வித பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப் படவில்லை. அத்தனை வருடங்கள் செய்யாத அவர்கள் இன்று என்னை விமர்சனம் செய்வது வேடிக்கையாகவுள்ளது என்றும் கூரினார். சிலறுடைய அபிவிருத்தி குறுகிய சிந்தனையுடையதும் குறுகிய காலம் கூட எழில் அறங்கு போன்று நிலைத்து நிற்காதது. என்னுடையது அப்படியல்ல நீண்ட நாற்கள் நிலைத்து நிற்க்கக் கூடியதாகவே இருக்கும்.

மேலும் கூறுகையில், 10, 15 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத சேவைகளை எனது 5 வருடத்திற்குள் செய்து முடிப்பேன் என்று கூறினார். எனது 5 வருடத்திற்குள்

குறிஞ்சாக்கேணிப் பாலம்
வடசல் பாலம்
உப்பாறு கைத்தொழில் பேட்டை
நவீன மீன் சந்த்தை
கலாச்சார மண்டபம்
மணிக்கூட்டு கோபுரம்
வீதி அபிவிருத்திகள்

போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடிப்பேன். இன்னும் பல திட்டங்கள் இருக்கிறது அவற்றை தற்போது வெளியிட முடியாது என்று கூறியதுடன் ஊழல் வாதிகளின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் கர்ஜனை செய்தார் அப்துல்லா மஹ்ரூப் MP.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு 'பஞ்ச் டயலாக்' பானியில் பதில் அளித்த அப்துல்லா மஹ்ரூப் MP ஊடகவியலாளர்களின் கேள்விக்கு 'பஞ்ச் டயலாக்' பானியில் பதில் அளித்த அப்துல்லா மஹ்ரூப் MP Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.