(வீடியோ) சென்ற வருடம் மோட்டர் சைக்கிள் பந்தயத்தின் போது கடும் விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த காமில் யூசுப் . அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.


சென்ற வருடம் கட்டுக்குருந்த கார் மற்றும் மோட்டர் சைக்கிள் ஓட்ட  பந்தயத்தின் போது காமில்
யூசுப் என்ற 22 வயது மொறட்டுவ பிரதேச இளைஞன் மோட்டர் சைக்கிலிள் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைகளில் அதிகம் பேசப்பட்டது.


அதி பயங்கரமாக  கடுமையாக விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் சிகிச்சையின் பின்னர் உயிர் பிழைத்ததும் அதிகளவில் பேசப்பட்டது.


இந்நிலையில் இவர் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என வெளிநாட்டு  செய்திகளிள் வெளியாகி உள்ளது.

ஆம் , காயங்கள் ஓரளவு குணமான நிலையில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு Clayton என்ற இடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மிகவும் திறமையான மோட்டர் சைக்கிள் வீரரான காமில் யூசுப் இலங்கையில் நடந்த பல முன்னணி போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பதுடன் அந்த துறையில் இளம் வயதிலேயே  நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ) சென்ற வருடம் மோட்டர் சைக்கிள் பந்தயத்தின் போது கடும் விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த காமில் யூசுப் . அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். (வீடியோ) சென்ற வருடம் மோட்டர் சைக்கிள் பந்தயத்தின் போது கடும் விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த காமில் யூசுப் . அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.