ஷஹீதான என் தந்தையின் ஜனாஸா எங்கே..? மன்னர் சல்மானை சந்தித்த பின்னர் ஸலாஹுத்தீன் கசோக்கி பகிரங்க கேள்வி.


சவுதியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்   ஜமால் கசோக்கி  துருக்கியில்   படுகொலை செய்யப்பட்ட
நிலையில், நேற்று முன்தினம் சவூதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோர்  அவரின் மகன்  ஸலாஹுத்தீன் கசோக்கியை சந்தித்து பேசினர். தந்தை இழப்புக்கு ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது அறிந்ததே..

இந்நிலையில்,...
ஷஹீதான என் தந்தையின் ஜனாஸா எங்கே..?
என்ற தொனியில் ஸலாஹுத்தீன் கசோக்கி சமூக வலையில் ட்வீட் செய்துள்ளார்.
"இந்த தகவலை பரப்புவதற்கு உதவுங்கள்.
ஷஹீதான என் தந்தையின் ஜனாஸா எங்கே. நேற்று மன்னரிடமும் இளவரசரிடமும் இதைத்தான் கேட்டேன். அவர்களிடம் இருந்து பதில் எதையும் பெறவில்லை.

எனவே உங்களது ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்
உங்கள் சகோதரன் ஸலாஹுத்தீன்"
என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


சவுதி அரசின் நவீன மாற்றங்கள் மற்றும் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கட்டுரை வெளியிட்டதன் விளைவாக ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் வைத்து சவூதி தூதரகத்தில்  படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மொழிபெயர்ப்பு உதவி : ஹுஸ்னி ஜாபிர் )
ஷஹீதான என் தந்தையின் ஜனாஸா எங்கே..? மன்னர் சல்மானை சந்தித்த பின்னர் ஸலாஹுத்தீன் கசோக்கி பகிரங்க கேள்வி. ஷஹீதான என் தந்தையின் ஜனாஸா எங்கே..? மன்னர் சல்மானை சந்தித்த பின்னர் ஸலாஹுத்தீன் கசோக்கி பகிரங்க கேள்வி. Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.