அரசுக்கு எதிராக JVP கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..வாழ்க்கை செலவு, நாட்டில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளமை, எரிபொருள் விலை அதிகரிப்பு,
போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, சிங்கப்பூர் எட்கா உள்ளிட்ட நாட்டை தாரை வார்க்கும் ஒப்பந்தங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், திருகோணமலை எண்ணை தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. 
கொழும்பு புஞ்சி பொரல்லசந்தியிலிருந்து மருதானை ஊடாக கோட்டை புகையிர நிலையம் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கோஷங்கள் எழுப்பியும் பதாதைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, பொதுச் செயளாலர் டில்வின் சில்வா, பிரச்சார செயளாலர் விஜித ஹேரத் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
இதன்போது உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகையில், 
மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்ரமசிங்க இணைந்த தேசிய அரசாங்கம் மூன்று வருடங்களை நிறைவு செய்துள்ளது. எனினும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் சந்தோஷமாக இருப்பதாகத் தெரியவில்லை. 
அத்தோடு கல்வி தகைமை இருந்தும் வேலையின்றி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மோசடிகளில் ஈடுபடும் ரணில் பொருளாதாரக் கொள்கையே இவற்றுக்கான காரணமாகும். 
எனவே எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றோரு ஊழல் தரப்பினருக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிடக் கூடாது என்றார்.  

அரசுக்கு எதிராக JVP கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.. அரசுக்கு எதிராக JVP கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.. Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.