அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை சமர்ப்பிக்கின்ற போது அது பற்றிய தெளிவினையும் விபரங்களையும் பொது மக்களுக்கும் வழங்க வேண்டும். கலாநிதி ஜெஹான் பெரேரா .


-ஏ.பி.எம்.அஸ்ஹர் -
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை சமர்ப்பிக்கின்ற போது அது பற்றிய தெளிவினையும்
விபரங்களையும் பொது மக்களுக்கும் வழங்க வேண்டும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.


தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமய குழுவின் முக்கியஸ்தர்களுடன்  கண்டி வெண்டோல் மாலிகா ஏட்ஜ் ஹோட்ட்லில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார் .


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

அரசாங்கத்தின் அவசரப்புத்தியினால் அர்சாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற பல நல்ல சட்ட மூலங்களும் சில நேரம் பிழையாக எதிர்க்கட்சியால் விமர்சிக்கப்படுகின்ற போது பொது மக்கள் இதனை நம்ப வேண்டிய் சூழ் நிலைக்குத் த்ள்ளப்படுகின்றனர்.


மிக அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டுக்கான சட்ட மூலம்.இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.யுத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பொது மக்களுக்கும் இந்த சட்ட மூலம் நன்மையளிக்கும் என்றிருந்த போதும்.இதனை ஒரு சாராருக்கு மட்டும்.அதாவது முன்னால் எல்.ரீ.ரீ.ஈ.போராளிகளுக்கு மட்டும் நன்மை பயக்கு.ஓரு சட்ட மூலமாக ம்ஹிந்த தரப்பு இதனை ஒரு பிரச்சாரமாக காட்ட முட்பட்ட போது  சிங்கள்  பொது மக்களில் பெரும் பாலானோர் இவர்களின் கருத்துக்களையும் விசமப்பிரச்சாரங்களையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத்த்ள்ளப்பட்டனர்.


உண்மையில் இந்த சட்ட மூலத்தின் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்திலுமுள்ள  தனி நபர்கள் இதன் மூலம் நஷ்ட ஈடுகளைப்பெற்றுக்கொள்ள முடியும் இதற்கான சட்ட் மூலமே இதுவாகும்.இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இது போன்ற  சட்ட மூலங்கள்  பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவத்ற்கு முன்னர் மக்கள் மன்றத்தின் முன் சமர்ர்பிக்கப்படல் வேண்டும் .


இல்லையென்றால் எதிர்த்தரப்பினரின் போலிப்பிரச்சாரங்களை பொது மக்கள் நம்ப வேண்டிய சூழ் நிலைக்குத்த்ல்லப்படுவார்கள்.இது அரசாங்கத்திற்கு நல்லதல்ல.எதையும் அவசரப்பட்டு நிறைவேற்றிக்கொள்ள நினைத்தால் அது கடைசியில் தோல்வியிலேயே முடிவடையும் என்பதை அரசாங்கம்  புரிந்து கொள்ள வேண்டும் .அம்பாரை மாவட்டத்தில் எல்லா சமுகங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இதற்காக நமது சர்வ மதக்குழு ஆற்றி வரும் பங்களிப்பு மிக அளப்பெரியது.இந்தக்குழுவில் அங்கம் வகிக்கும் சர்வ் மதத்தலைவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பு எப்போதும் எமக்கு உட்சாகத்தைத்தருவதோடு மட்டுல்லாது மெச்சத்தக்கதுமாகும் .


இதே போன்று இம்மாவட்ட்த்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அடையாளங்கண்டு அவர்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர் காலத்தில் இக்குழு பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெதிவித்தார் .
இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் இணைப்பாளர் வெனோரி டீ சில்வா  திருமதி ஜெ.பெரேரா மெளலவி ஏ.பி.எம்.அஸ்வர் கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விகாராதிபதி ரன்முதுகல் சங்கரத்ன தேரர்.அருட் தந்தை நாலக  பொன்சேகா சொண்ட் நிறுவனத்தின் இணைப்பாளர் ஆர்.ரஞ்சித் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை சமர்ப்பிக்கின்ற போது அது பற்றிய தெளிவினையும் விபரங்களையும் பொது மக்களுக்கும் வழங்க வேண்டும். கலாநிதி ஜெஹான் பெரேரா . அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை சமர்ப்பிக்கின்ற போது அது பற்றிய தெளிவினையும் விபரங்களையும் பொது மக்களுக்கும் வழங்க வேண்டும். கலாநிதி ஜெஹான் பெரேரா . Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.