ஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் , அமான் தீயசக்திகளும் .


எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)
சவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மத் பின் ஸல்மானின் ''சீர்திருத்தகொள்கையை''
அவரின் அரசியல் நடவடிக்கைகளை,  நேர்த்தியான முறையில் அச்சம் இன்றி   விமர்சனத்துக்கு உட்படுத்திவந்த   சவூதி  அரேபியாவின் பிரபல லிபரல்  ஊடகவியலாளர் ஜமால் காஸிஜ்கீ     ( جمال_خاشجقي ) ஆவணம் ஒன்றை பெற்றுகொள்வதற்காக   துருக்கியில் உள்ள சவூதி தூதராலயத்துக்குல்  சென்ற நிலையில் மர்மமான முறையில்    காணாமல் போயுள்ளார். ( 3 நாட்களுக்கு முன்னர் எழுதபட்ட  கட்டுரை )


இவர் முஹம்மத் பின் ஸல்மானின் அரச கொலை பிரிவினால் கொல்லப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர் சவூதி தூதராலயத்துக்குல் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு  கொல்லப்பட்டு,துண்டங்களாக வெட்டப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்  இது ஒரு 'திட்டமிடப்பட்ட கொலை' அவர் பொறிவைத்து பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் , இதை காட்டும் ஆதாரங்கள் எம்மிடம் சிக்கியுள்ளன என   துருக்கி அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர்    .ஆனால் சவூதி பின் ஸல்மான் நிர்வாகம்  அதை மருத்து அவர் தூதராலயத்தில் இருந்து வெளியேரி சென்றுவிட்டார் என கூறியுள்ளதுடன் பின்  ஸல்மான் ஜமாலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்   இதேவேளை துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் எர்துவான்  ஊடகவியலாளர் ஜமால் சவூதி தூதுவராலையத்தில் இருந்து , வெளியேறியதை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை  ஜமால் கசோஜி இஸ்தான்பூளில் உள்ள   சவூதி தூதராலயத்துக்கு சென்ற நாளில் சவூதியில் இருந்து சுமார் 15 பேரை கொண்ட குழுவினர் தூதரகத்தை அடைந்ததாகவும் அடுத்த சில மணித்தியாலங்களில்  அவர்கள் துருக்கியை விட்டு  வெளியேறி சென்றுள்ளார்கள் எனவும் அவர்கள் பின் ஸல்மானின் கொலை குழுவை சேர்த்தவர்களாக இருக்க முடியும் என துருக்கி அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்  ஜமால் காஸிஜ்கீ சித்திரவதையை பின்னர் கொல்லப்பட்டு அவரின் உடல் தூதராலயத்துக்கு வெளியில் துருக்கியின் ஒரு பகுதியில் மறைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் முழுமையாக சிதைக்கப்பட்டு இருக்கலாம்  என துருக்கிபொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . ஜமால் காணாமல் போனமை  சர்வதேச அளவில் பெரும்பேசும்பொருளாக மாறியுள்ளதுடன் சர்வதேச ஊடங்களின் தலைப்பு செய்தியாக உள்ளது .


ஜமால் காஸிஜ்கீ திருமணம் முடிப்பதற்காக காத்திருந்த  துருக்கிய எழுத்தாளர் Hatice Cengiz,  இது பற்றி குறிப்பிடும்போது  துருக்கிய நகரான இஸ்தான்புலில் உள்ள   சவூதி தூதரகத்திடமிருந்து  திருமண ஆவணமொன்றை பெற்றுக்கொள்வதத்திற்காக இரண்டாவது தடவையாக அங்கு சென்றபோது , அவர் அங்கிருந்து திரும்பி  வரவில்லை  தூதரகத்தை சுமார் மூன்று மணித்தியாலத்தில் பின்னர் தொடர்புகொண்ட போது  ஜமால் அங்கிருந்து சென்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் கூறப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார் .அரபு முஸ்லிம் நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக   2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி மற்றும் புரட்சி வெடித்தபோது அங்கு  எழுச்சிபெற்ற இஸ்லாமிய அமைப்புக்களை    ஜமால் பலமாக ஆதரித்துவந்துள்ளார் .என்பதுடன் இவர் முஹம்மத் பின் ஸல்மானின் நடவடிக்கைகளை ஊடகவாயிலாக கடுமையான விமர்சனத்துக்கு உடற்படுத்திவந்துள்ளார் , அண்மையில் இவர் வழங்கியிருந்த  செவ்வியொன்றில்  சவூதியின் புத்திஜீவிகள் , கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள் ,ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை பின் ஸல்மான் வழங்கவேண்டும்  ,சவூதியில் இடம்பெறும் ''சீர்திருத்தத்தை'' விவாதத்திற்கு உட்படுத்த அவர் அனுமதிக்கவேண்டும் ஆனால் பின் ஸல்மான் நிர்வாகம் அவர்களை சிறையில் அடைகின்றது ,சீர்திருத்தம் தொடர்பான அவர்களின் கருத்துக்களுடன் அவர்களை சிறையிலிடப்படுகின்றார்கள் , உண்மையான சீர்திருத்தத்தை விரும்புபவர்கள் இன்று சவூதியில்  தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர் பின் ஸல்மான் அவர்களை  சுவாசிக்க அனுமதிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் இவர் தனது எழுத்து ,பேச்சு மூலமாக  சவூதியை கடுமையாக விமர்சித்தார். சவூதி தலைமைத்துவம்  தொடர்பான இவரின் அண்மைய விமர்சனங்கள் உலகளவில் பரவலாக கவனத்தை  பெற்றிருந்தது  சவூதியில்  முடிக்குறிய  மன்னர் பின் ஸல்மானை  ரஷ்ய ஜனாதிபதி  பூட்டினின் சர்வாதிகாரத்துடன்  ஒப்பிட்டர், சீர்திருத்தவாதிகளை சிறையில் அடைத்து அவர்களின் குரல்களை  முடக்கிவிடும் பின் ஸல்மான் எப்படி  ஒரு சீர்திருத்தவாதியாக இருக்க முடியும் என கேள்வியெழுப்பினார், குறிப்பாக   இவர் தனது விமர்சன கருத்துக்களினால் பின் ஸல்மான் மேற்கு உலகில் கட்டியெழுப்ப முயன்றுவரும் ''சீர்திருத்தவாதி '' என்ற நாமத்தை கேள்விகுற்படுத்திவந்தார்   இந்த பின்புலத்தில்தான் இவரின் மறைவு பார்க்கப்பட்டவேண்டியுள்ளது , இவரின் மறைவை பற்றி குறிப்பிடும் அரபு ,ஆங்கில ஊடகங்கள் சில துருக்கிய அதிகாரிகளை ஆதாரம் / மேற்கோல் காட்டி     இவர் இஸ்தான்பூளில் உள்ள சவூதியின் தூதரகத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு அவர் தடுத்துவைக்கப்பட்டு சவூதியில் இருந்துவந்த விசேட 15 பேரைக்கொண்ட குழுவினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் வாகனம் ஒன்றின் மூலமாக அவரின் உடல் வெளியேற்றப்பட்டு துருக்கியின் ஒரு பகுதிகியில் புதைக்க அல்லது அழிக்கப்பட்டுள்ளது என உறுதியாக குறிப்பிடுகின்றனர் .மேற்றபடி ஜமாலின் படுகொலை பின் ஸல்மானின் கொலை கும்பலினால்   நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த்   சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு துபாயில் இடம்பெற்ற இஸ்ரேலிய கொலை குழுவின் நடவடிக்கையை ஒத்ததாக உள்ளது பலஸ்தீன் விடுதலை  போராட்டத்தின் முக்கிய போராளிகளில்  ஒருவரும் ஹமாஸ்   கட்டமைப்பான  இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை கொண்டவருமான    மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ்-   துபாயில் வைத்து 15 பேர் கொண்ட ஆக்கிரமிப்பு  இஸ்ரேலின்  கொலைக் குழுவினால்  படுகொலைசெய்யப்பட்டிருந்தார்  , துபாய்க்குள் நுழைந்த சயோனிச கொலை கும்பல் மிக கச்சிதமான முறையில் மஹ்மூதை கொலை செய்துவிட்டு சில மணித்தியாலங்களில்  துபாயில் இருந்து தப்பிச்சென்றிருந்தது, இந்த சம்பவம் தற்போது   துருக்கியில் ஜமாலுக்கு ஏற்றப்பட்டுள்ளதை   மட்டுமல்ல  இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் மற்றும் அமான் அமைப்புக்களுக்கும்  சவூதியின் உளவு அமைப்பான GIP- The General Intelligence Presidency ( Al Mukhabarat Al A’ama ) க்கும் இடையில்  ஏற்பட்டுவரும் வலுவான  உறவை காட்டுவதாகவும் உள்ளது. இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு அப்பாவி மனிதர்களின் மண்டையோடுகளினாலும் ,எலும்புகளினாலும் , இரத்தத்தாலும், சதைகளினாலும்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது , பலஸ்தீனர்களின் உயிர் பறிக்கப்பட்ட சிதறிய  உடல்களின்மீதே இந்த சட்டவிரோத யூத தேசம் கட்டப்பட்டுள்ளது,


அந்த சட்டவிரோத தேசத்தை  மொஸாட் மற்றும் அமான் என்ற பிசாசுகள்  காவல்காத்து வருகின்றன  இந்த அமைப்புக்கள்  இஸ்ரேலுக்கு வெளியே இதுவரை சுமார் மூவாயிரம் மனிதர்களை பல்வேறு நாடுகளில்  படுகொலை செய்து  தேர்ச்சி பெற்றுள்ளது இந்த சட்டவிரோத தேசத்துடனும் அதன் பாதுகாப்பு பிசாசுகளான   மொஸாட் மற்றும் அமான் அமைப்புகளுடன்தான்   பின் ஸல்மானும் அவரின் உளவு அமைப்புகளும்  இன்று தேனிலவு கொண்டாடுகின்றன .அது மட்டுமின்றி மொஸாட் மற்றும் அமான் அமைப்புக்கள் மக்கா ,மதீனா நகரங்களுக்குள்ளும் நுழைவதற்கு பின் ஸல்மான் அனுமதி வழங்கியுள்ளார் . சவூதி உளவு அமைப்பின் தலைவர் காலித் பின் அலி அல் ஹுமைதானுக்கும் மொஸாட் உளவு அமைப்பின் தலைவர் யோசி கோஹனுக்கும் இடையில் மக்கா ,மதீனா புனித நகரங்களில் அடிக்கடி சந்திப்புக்கள் இடம்பெறுவருவதாக ஆய்வுத்  தக்லல்கள் குறிப்பிடுகின்றன .  சவூதி முடிக்குரிய மன்னர் முஹம்மத் பின் ஸல்மான்  அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஜமால் 2017 ஆம் ஆண்டு  சவூதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர்  சவூதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய கட்டுரையில்  ஜமால் குறிப்பிட்டு இருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது  . மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த  ஜமால். அமெரிக்காவின்  இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில்   பட்டம் பெற்றார்  அவர் சமூக ,அரசியல் நடவடிக்கைகளில் கொண்ட ஆர்வம் காரணமாக ஊடகவியலாளராக  தன்னை ஆக்கிக்கொண்டார் . 1990 களில் ஆப்கானிஸ்தானில்  கம்யூனிஸ சோவியத் ஊடுருவியபோது, குவைத் ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது , அல்ஜீரியாவில் இடம்பெற்ற  இராணுவ சதிபுரட்சி    ஆகியவை  தொடர்பான துல்லியமான  செய்திகளை உலகிற்கு வழங்கிவந்துள்ளார்,  இவர் பல முறை  உஸாமா  பின் லாதினை  நேர்காணல் கண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சவூதியின் அதிகாரவர்க்கத்துடன் நெருக்கமான தொடர்பை  ஏற்றபடுத்திக்கொண்டார் இவர் ஊடக, அரசியல் விமர்சனம் துறைகளில்  சுமார் 30 ஆண்டுகளாக ஈடுபாடு காட்டிவந்துள்ளார்.


    இவரை ட்விட்டரில்   1.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.இவர்    சவூதி அரச குடும்பத்தின் ஆலோசகராகவும்  செயல்பட்டுள்ளார் , இவரின் சீர்திருத்தம் கோரும் விமர்சனபோக்கு காரணமாக இரண்டு தடவைகள் இவர் சவூதியில் வகித்த ஊடகத்துறை பதவிகள்  பறிக்கப்பட்டுள்ளது இறுதியாக மீண்டும் 2007 ஆம் ஆண்டு, 'அல் வதன் ' தி நேசன் என்ற  நாளிதழலில் பதிப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார் எனினும்  சில சர்ச்சைகளால் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் .  அதற்கு பிறகு அவர் சவூதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்துவந்தார் இவர் அமெரிக்காவை தலமாக கொண்டு இயங்கும் தி வாஷிங்டன் போஸ்டில்  தனது ஆக்கங்களை எழுதிவந்தார் . அவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, தி வாஷிங்டன் போஸ் வழக்கமாக கட்டுரை  எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு அந்த இடத்தை வெற்றிடம் விட்டது பத்திரிகையை வெளியிட்டுள்ளது .இந்த இவர் சவூதி தூதராலயத்தில் வைத்து காணாமல் போனமை சர்வதேச அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்றப்படுத்திவருகின்றது ஐநா மனித உரிமைகள் அமைப்பு இந்த விவகாரத்தை மிக ஆபத்தான ஒன்றாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு நாடுகள் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அறிவித்துள்ளதுடன் , பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் தமது கண்டங்களை பதிவு செய்து வருகின்றன , சவூதி பல இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றாலும் அந்த நெருக்கடிகள் எந்தளவு தூரம் உண்மையான தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன ,  இதேவேளை அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாக்களை பின் ஸல்மான் நன்கொடையாக  அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அவை சந்தேகத்தையும் சர்ச்சையையும்  ஏட்படுத்தியுள்ளது ,சவூதியின் சிறைகள் இஸ்லாமிய அறிஞர்கள் , துறைசார் கல்வியாளர்கள் , சீர்திருத்த வாதிகள் என பல்வேறு தரப்புகளை கொண்டவர்களினால் நிரப்பட்டுவருவதுடன் அவர்களின் தலைகளை வெட்டி  மரணதண்டனை வழங்குமாறு பின் ஸல்மான் நிர்வாகம் பரிந்துரை செய்துவரும் நிலையில் , பின் ஸல்மானின் கொலை குழுவினால் ஜமால் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் இணைத்துள்ளது.
ஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் , அமான் தீயசக்திகளும் . ஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் , அமான் தீயசக்திகளும் . Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.