சவூதி ஊடகவியலாளா் ஜமால் கஷோகி துருக்கி தூதரகத்தின் உள்ளே கொல்லப்பட்டதைசவூதி அரேபியா ஒப்புக்கொண்டது.



சவுதி செய்தியாளர் ஜமால் கஷோகி (Jamal Khashoggi) இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டார் என்பதை சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.



தூதரகத்திற்குள் இரு வாரத்திற்கு முன் நுழைந்த அவர் மாயமாய் மறைந்தார்.

இந்நிலையில் தூதரகத்தின் உள்ளே நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சவூதி ஒத்துக் கொண்டுள்ளது.

மேலும் உயர் புலனனாய்வு அதிகாரி அகமது அல்-அஸ்ஸீரியையும் (Ahmad al-Assiri) அரசாங்கத்தின் ஊடக ஆலோசகர் சவுத் அல்-கட்டானியையும் (Saud al-Qahtani) சவூதி அரேபியா பதவி நீக்கம் செய்துள்ளது.

அவர்கள் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் (Mohammed bin Salman) உதவியாளர்கள்.

திரு. கஷோகி காணாமற்போனதன் தொடர்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஷோகி கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் சவூதி அரேபியாவுக்குத் தொடர்பு இருக்குமேயானால் அதற்கு எதிராய் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல் ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சவூதி ஊடகவியலாளா் ஜமால் கஷோகி துருக்கி தூதரகத்தின் உள்ளே கொல்லப்பட்டதைசவூதி அரேபியா ஒப்புக்கொண்டது. சவூதி ஊடகவியலாளா் ஜமால் கஷோகி துருக்கி தூதரகத்தின் உள்ளே கொல்லப்பட்டதைசவூதி அரேபியா ஒப்புக்கொண்டது.   Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.