UHY இண்டர்நஷனல் இலங்கையில் புதிய உறுப்பினர் நிறுவனமாக Centra Management நியமனம் ..




உலகளாவிய ரீதியில் கணக்கியல், வரி மற்றும் நிதி ஆலோசனை நிறுவனமாக விளங்கும்
*Urbach Hacker Young (UHY)* 1986 இல் ஆரம்பிக்கப்பட்டு  London UK ஐ தலைமையகமாகக் கொண்டு  98 க்கும் மேற்பட்ட நாடுகளில் 320 க்கும் அதிகமான கிளைகளுடன் கணக்கியல், வரி மற்றும் நிதி ஆலோசனை நிறுவனங்களின் ஒரு முன்னனி வலையமைப்பு என்பதனுடன்  கிட்டத்தட்ட 8,100 க்கும் மேற்பட்ட வலுவான ஊழியர்களுடன் உலகின் 16வது மிகப்பெரிய சர்வதேச கணக்கியல் மற்றும் நிதி ஆலோசனை நிறுவனமாகும்.   

UHY இன் இலங்கைக்கான புதிய உறுப்பினர் நிறுவனமாக *கண்டி யஹலத்தன்னையைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் அல்ஹாஜ் இஸ்மத் சத்தார்* அவர்களின் நிறுவனமான *Centra Management* உடன் கைகோர்த்துள்ளது.  

இலங்கையில் கணக்கியல் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாக 2012 ல் இருந்து கொழும்பு கொள்ளுப்பிடியில் தனது தலைமையகத்தையும் கண்டியில்  தனது கிளையுடன்  செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

 அதன் நிர்வாக பணிப்பாளர் அல்ஹாஜ் இஸ்மத் சத்தார்  கூறுகையில்  "எங்கள் நிறுவனம் பல காரணங்களுக்காக UHY யுடன் இணைந்துள்ளது. உலகெங்கிலுமுள்ள  UHY இன் சக ஊழியர்களின் நிபுணத்துவம் மற்றும் அறிவுடன் இணைந்த தொடர்பு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் நமது சொந்த திறன்களை உறுதிப்படுத்துகிறது மட்டுமல்லாமல், இது எங்கள் வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டும்” எனக் கூறினார்.   

மேலும் தொடர்புகளுக்கு;
 Centra Management
 No 25, Simon     Hevavitharana Road, Colombo 03.  
Phone 0112301606/7 
email partner@centramgt.com Fore more info 
http://centramgt.com www.uhy.com


UHY இண்டர்நஷனல் இலங்கையில் புதிய உறுப்பினர் நிறுவனமாக Centra Management நியமனம் .. UHY இண்டர்நஷனல் இலங்கையில் புதிய உறுப்பினர் நிறுவனமாக Centra Management நியமனம் .. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.