விளையாட்டு பாட இளம் ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு ! (படங்கள்)


தனக்கேற்பட்ட பிரச்சினையினால் மனஅழுத்தத்திற்கு உள்ளான இளம் ஆசிரியர் தனது வீட்டில்
இன்று(31)காலை  தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதியை சேர்ந்த விஜயஸ்ரீ விமலஸ்ரீ(வயது-26) என்பவராவார்.

புசல்லாவ இந்து தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றிய இவர் நேற்று விடுமுறை பெற்று வந்து தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

இத்தற்கொலை தொடர்பில் ஆசிரியரின் நண்பர்கள் பலர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் சகலருடனும் நன்றாக பழகி கதைப்பவர் என்றும் நிதி தொடர்பான ஒரு பிரச்சினையே இவரது மரணத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.


பல மாணவர்களை விளையாட்டு வீரர்களாக அறிமுகப்படுத்தி இவ்வாறான ஒரு முடிவை அவ்ஆசிரியர் மேற்கொண்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டு பாட இளம் ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு ! (படங்கள்) விளையாட்டு பாட இளம் ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு ! (படங்கள்) Reviewed by Madawala News on October 31, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.