(ஆவணங்கள் இணைப்பு) என் கணவரை காப்பாற்ற உதவுவீர்களா? ஒரு மனைவியின் கண்ணீர் வேண்டுகோள்.


அஸ்ஸலாமு அலைக்கும்..அன்பின்  சொந்தங்களே,என் சகோதரங்களே!!!

கரம் பிடித்த மனவாளனின் உயிர்காக்க ஒருமுறை வேண்டும் உங்கள் உதவி......

இருசிறுநீரகமும் செயலிழந்து,தன் உடம்பில் ஒவ்வொரு கலத்திலும் பலமிழந்து,இதயதுடிப்பு ஓசையின் சுருதிஇழந்து,வாயுபரிமாற்றம் திணறி நுரையீரலின் தரையை தொடமறந்து,எட்டு வைக்க உணர்வின்றி கட்டில் படுக்கையில் வேதனைபடும் என் கணவனுக்காய் ஓர் வேண்டுதல்..இத்தனையும் தீர்க்க அவசர சத்திர சிகிச்சை,போதிய பணமின்றி தூரமாகிறது..


      என் அன்பாளன் வேதனையால் துடிக்கும்   வலியில் துணைவியாய் ஆறுதல் சொல்வேனா??வாப்பா வாப்பா என்று தூக்கத்திலும் உளறும் என் குழந்தைக்கு தாயாய் தாலாட்டுவேனா??


இத்தனை காலமாய் பக்குவமாய் எட்டு வைத்த என் வைத்திய படிப்பின் இறுதி பரீட்சையை வெற்றிகரமாய் முடித்துவிடுவேனா??இதற்கிடையில் வைத்தியசாலைக்கும் வீட்டுக்கும் நடுவே நடைப்பிணமாய் நடமாடும் என் உள்ளம் கேட்கிறது உதிர்ந்து விட்ட உன் புன்னகை மீண்டும் மலர ஆயிரம்,,ஓராயிரம்..நோட்டுக்கள் தேவை எப்படி புரட்டுவாய் என்று,..உங்களில் ஒருத்தி,,தனி ஒருத்தியாய் நின்று புலம்புகிறேன்..இனி என்ன செய்வேன்

என்று குழம்புகிறேன்..என் கண்ணீரை துடைத்து என் வாழ்க்கைக்கு ஒளி தருவீர்கள் என்று நம்பி..உங்களிடம் இந்த பாரிய பொறுப்பை ஒப்படைக்கிறேன்.."சிறு துளி பெரும் வெள்ளம்"உங்களால் முடிந்த ஒவ்வொரு சிறு ஸதக்காவும் ஓர் உயிரை வாழ வைத்து அதன் மழலையை சிரிக்க வைக்கபோகிறது..Jazakallah khair.
  இவள் உங்கள் சோதரி
😭
     M.Y.Rukzana Banu
       (final yr BUMS)
Ac No..078200150022802
peoples Bank,Borella Branch : Tp  0711514255

( தகவல்: Muneera Abubakkar )


(ஆவணங்கள் இணைப்பு) என் கணவரை காப்பாற்ற உதவுவீர்களா? ஒரு மனைவியின் கண்ணீர் வேண்டுகோள். (ஆவணங்கள் இணைப்பு) என் கணவரை காப்பாற்ற உதவுவீர்களா? ஒரு மனைவியின் கண்ணீர் வேண்டுகோள். Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5