இருப்பின் நிலைப்பும், எதிர்காலச் சமுதாயமும்....


இலங்கையின் முஸ்லிம் வருகையும், இருப்பின் ஆரம்பங்களும் பற்றிய பல வரலாற்று சான்றுகள் இருந்தாலும்,
அவற்றின் ஆதி இருப்பிற்கான உறுதியான அடையாளம், சியாறங்களும் ,பள்ளிவாசல்களும், தர்ஹா கலாசாரமுமே  ஆகும், ...இந்த வகையில் சியாறங்களில் அடங்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூக, அரசியல், சமய, பெறுமானத்தை #வரலாற்று நோக்கில்  பார்க்கும் நிலை இன்றைய #வறட்டுஇயக்கவாவாதிகளிடம், இல்லாமல் போய் விட்டது, அதற்கான ஒரு விழிப்புணர்வுப் பதிவே இதுவாகும்,

சியாறங்கள் என்றால் என்ன?..

சியாறங்கள் என்பது, ஒரு சமூகத்தின் வரலாற்று அடையாளங்களின் ஒரு பகுதி, அவை மனிதர்களின் கப்றுகளாகவோ, நினைவு இடங்களாகவோ, அடையாளப் பொருட்களாகவோ இருக்க முடியும், சியாறங்கள் என்றால் அவை கல்லறைகள் மட்டுமே என்பது ஒரு சிலரது, தப்பான அபிப்பிராயமாகும்,

இலங்கை சியாறங்களின் பின்னணி,

இலங்கையில் உள்ள பெரும்பாலான புராதன சியாறங்கள்  பொதுவாக, ஆதம் நபி அவர்களின் கால, வரலாற்றோடு தொடர்பு பட்டிருக்கின்றன,  ஆனாலும் அவை தொடர்பான சரியான கால அளவுகளில் வித்தியாசமான நோக்குகள் உண்டு,

இலங்கை முஸ்லிம் இருப்புடன் தொடர்புடைய இச் சியாறங்களில் அடங்கப்பட்டிருப்போர் தொடர்பான சமயக் கண்ணோக்குகள் பல்வேறுபட்டதாக இருப்பினும், இவர்களது சமூக அரசியல் ,வரலாற்றுப் பாத்திரம் மிக முக்கியமானது இதனை யாரும் தமது குறுகிய இலாபங்களுக்காக மறுக்க முடியாது,

யார் இவர்கள்????

உலகின் பல பாகங்களில் இருந்தும், இலங்கைக்கான, சமயப்போதகர்களாகவும், வழிகாட்டிகளாகவும், அரசியல் அறிஞர்களாகவும், ஆய்வாளர்களாகவும், நாடுகாண்பயணிகளாகவும், சுதந்திரப் போராட்ட வீர்ர்களாகவும், அரசிளங் குமாரர்களாகவும் ,

இங்கு ஏதோ ஒரு வகையில் வந்து சிறப்புப் பணி புரிந்தவர்கள், வாழ்ந்த, மரணித்த, தரித்த இடங்களையே இன்று மக்கள் "சியாறங்கள்" என்ற பெயரில் மரியாதை செய்கின்றனர்.., இச் செயற்பாடு, மரியாதையாக மட்டுமின்றி ஒரு சமூகத்தின் ஆதி இருப்பின் தொடர்ச்சியினை நினைவு கூர்வதாகவும் இருந்து வருகின்றது,

சமயப் பார்வை

இலங்கைக்கு  பல நோக்கங்கிலும் வருகை  தந்த அதிகமான பெரியார்கள்  #ஹாஷிம்குலத்தைச் சேர்ந்தவர்கள் என ILM ABDUL AZEEZ,தனது #இலங்கைச் #சோனகர்இனவரலாறு, (1907) , என்ற நூலில் குறிப்பிடுகின்றார், இது தொடர்பான ஆதாரங்கள் இலங்கையின் முதல் நீதிபதியான SIR ALEXANDER JOHNSON, அவர்களின் குறிப்புக்களில் உள்ளதாகவும், PROF, MSM ANES , தனது " #புத்தளம்முஸ்லிம்கள்" நூலில் உறுதிப்படுத்துகின்றார்.

எனவேதான் இலங்கையில் உள்ள சியாறங்களில் அடங்கப்பட்டுள்ளோர் சாதாரணமான வரலாற்றைக் கொண்டவர்கள் அல்ல, இந்த உலகின் வரலாற்றோடு தொடர்பு பட்டிருந்த சாதனையாளர்கள். எனக் கூற முடியும்,

சிறந்த உதாரணம், 

கண்டி மஹியாவை பள்ளிவாசலில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் எகிப்தின் தேசிய வீரர் #ஒறாபிபாஸாவுடன்(1841) இலங்கை வந்த  இருவரின் வரலாறு இதற்கு சிறந்த ஆதாரமாகும்,

GENERAL மஹ்மூத் பஃமி பாஸா..

இவர்கள் ஒறாபி பாஸாவுடன் வந்த ஒரு படைத்தளபதி, புரட்சி அரசாங்கத்தில் பொதுச்சேவைகள் ( Public Works)அமைச்சராக்க் கடமை புரிந்தவர், உலகப் பிரசித்தி பெற்ற, #World #General #History. என்ற நூலை எழுதியதுடன், எகிப்தில் இன்றும் மதிக்கப்படும், தேசிய மரியாதைக்கான பொறியியலாளர்.
அவர் இலங்கையில், 1894 ல் மரணித்து நல்லடக்கம் செய்யப்பட்டார்.

GENERAL யாக்கூப் ஷமி பாஸா

இவர் எகிப்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக்க் கடமை புரிந்த போர்வீர்ர்களின் தளபதி, எகிப்திய புரட்சியின் உலகளாவிய ஒழுங்கமைப்பிற்கான பொறுப்பாளராக இருந்தவர், இவர் 1889ல் மரணித்து கண்டி மஹியாவையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்,

இவர்களின் பணிகள் 

ஒறாபு பாஸா வுடன் இவர்கள் இலங்கையில் இருக்கும் காலங்களிலேயே, #சித்திலெப்பை, #வாப்பிச்சிமரிக்கார், #கரீம்ஜிஜபர்ஜி, ஆகியோரின் ஒத்துழைப்புடன் இலங்கை முஸ்லிம்களுக்கான அனைத்து வகையான நாகரீக, சமூக ,கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, அதில் ஒன்றே, எகிப்திய அல் அஸ்ஹரை இலட்சியமாக்க் கொண்டு உருவாக்கப்பட்ட COLOMBO ZAHIRA,COLLEGE,

இதன் பின்னர் ஒறபி பாஸா தனது நாடான எகிப்திற்கு  திரும்பி விட்டார்.

இந்தவகையில் இலங்கை முஸ்லிம் இருப்பின் அடையாளங்களாக எம்மால் கணிப்பிடக்கூடிய கி.பி,1800 காலப்பகுதியில் வாழ்ந்த பெரியார்களின் சமூகப்பாத்திரம் எமது நாட்டு முஸ்லிம்களின் வாழ்வியலில் எத்தனை பாரிய மாற்றங்களையும், புத்துணர்வையும் ,சித்தனைகளையும் கொண்டு வத்திருக்கின்றது. என்பதற்கான சிறந்த ஆதாரங்களாகும்,

#விஜயனும், #ஒறாபியும், 

இலங்கைச் சிங்கள மக்களின் வரலாற்றில். விஜய குமாரனும் அவனது தோழர்களும்   ஏற்படுத்திய தாக்கத்திற்கு நிகரான வாழ்வியல் தாக்கத்தை, இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில்,  ஒறாபி பாஸாவும் அவரது தோழர்களும் ஏற்படுத்தி உள்ளனர் என்பது எனது கணிப்பீடு, ஆனால் விஜயனுக்கும் அவனது வருகைக்கும் சிங்கள வரலாற்றில் உள்ள மதிப்பும், முக்கியத்துவமும், இவ்வாறானவர்களுக்கு எம்மவர்களால் சிறிதும் வழங்கப்படுவதில்லை,

பணியும் ,சிறப்பும்,  

இலங்கையின் எப்பாகத்தில் உள்ள சியாறங்களில் அடங்கப்பட்டிருக்கும், பெரியார்களும், நினைவு இடங்களும், இலங்கை முஸ்லிம் இருப்பிற்கும், அதன் சர்வதேச தொடர்பிற்குமான. ஆதாரங்களுக்கான ஆணி வேர்களாகும்,மட்டுமல்ல இவர்கள் இன்றைய தலை முறையாகிய நாம் பிறப்பதற்கு முதலே எமக்காக,  எதுவித எதிர்பார்ப்புமின்றி பணி புரிந்தவர்கள்.

நமக்கான, படிப்பினைகள், ...

நேற்றைய உலகமல்ல இன்று இருப்பது, இன்று எம்மில் ஒரு சிலரிடம் உள்ள இயக்கவாத போர்க்குணமும், அவ்வாறான இயக்கங்களும், , இன்னும் சில ஆண்டுகளில்  இல்லாமல் போகலாம், மட்டுமல்ல எதிர்காலத் தலை முறையினர் எமது இருப்பியல் ஆதாரங்களை நிறுவுவதற்கான தொழினுட்பத்தையும்,  வழிமுறைகளையும் கண்டறியலாம், அதன்மூலம், குறித்த மனிதர்களையும், நினைவுப் பொருட்களையும்   விபரமாக அறிய விஞ்ஞானமும் உதவலாம், ,

அதுவரை வரலாற்று நோக்கிற்காகவாவது, குறித்த இடங்களையும், கப்றுகளையும் பாதுகாக்க வேண்டிய #கட்டாய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு,

மாறாக இவ்வாறான பெறுமதியான வாழ்வியல் வரலாற்று எச்சங்களை வறட்டு  ,சமயாவத சிந்தனைகளுக்காக அழிக்க முற்படுவோரும் அவர்களது பரம்பரையும்,  இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் "சமூகத் துரோகிகளாகவே  கணிக்கப்படுவர், .

..வரலாற்று இடங்களைப் பாதுகாப்போம், வளமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
Mufizal77@gmail.com
இருப்பின் நிலைப்பும், எதிர்காலச் சமுதாயமும்.... இருப்பின் நிலைப்பும், எதிர்காலச்  சமுதாயமும்.... Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.