நாம் அவசரமாகச் செய்ய வேண்டியது என்ன? (இலங்கை முஸ்லிம் இருப்பும், எதிர்காலச் சமூகப் பொறுப்பும்)

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அதன் தொன்மையுடன் தொடர்புபட்டது, அந்தவகையில் ஒவ்வொரு
சமுதாயமும் தமது, புராதனங்களைப் பாதுகாக்க முனைகின்ற வேளையில் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, புராதனம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதே இப்பதிவு,

தொன்மையின் சிறப்பு, 

இன்று சிங்கள சமூகம் ,தமது வரலாறு பற்றிய பார்வையை மறு பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர்,,மட்டுமல்ல தமது பூர்வீகத்தை நிறுவுவதில் பௌத்த சமயத்தின் செல்வாக்கை விட அதற்குமுந்திய காலப்பகுதியை இப்போது ஆதாரமாக்க் கொள்கின்றனர்,

இதனை ஒட்டி, இலங்கையின் பாடசாலை,  வரலாற்றுப் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள்  இடம்பெற்றுள்ளன,

புதிய  கல்லறை கண்டு பிடிப்பு. 

இலங்கையில் 2007 ல் "சூரியகந்த" என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புராதன கல்லறை, கி.மு.3075 ஆண்டுகளின் வரலாற்றைக் காட்டுவதாக,  தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோம தேவ குறிப்பிடுகின்றார், இது உலகின் புதை குழி வரலாற்றிலும் செல்வாக்கைக்கொண்டுள்ளது,

மட்டுமல்ல இக்கல்லறை இந்நாட்டு மக்களின் வழக்காறுகளையும், நாகரீகத்தையும் பிரதிபலிக்கின்றது, ஒரு சாதாரண கல்லறை  உலக, மற்றும்,இலங்கை  வரலாற்றில் எந்தளவு இடம் பிடித்துளளது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்,

சியாறங்கள் யாருடையது?

இலங்கையில் உள்ள பல்வேறுபட்ட சியாறங்கள் இலங்கை வரலாற்றுடன் தொடர்புபட்டன, மட்டுமல்ல ,உலகில் இருந்துவந்த நாடுகாண்பயணிகளும், இளவரசர்களும், ஆய்வாளர்களாகவும், சமயப்பிரச்சாரகர்களாகவும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்  வந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடங்களே, இன்று சியாறங்களாக உள்ளன,

மட்டுமல்ல இன்றைய இலங்கை முஸ்லிம்புராதனம் இதிலிருந்தே ஆரம்பிக்கின்றது, , "#மீஷான்" கட்டைகளிலேயே, எமது, காலம் கணிப்பிடப்படுகின்றது, , இவற்றினை கட்டாயம்  பாதுகாக்க வேண்டிய நிலை இன்றைய சமூகத்திற்கு உண்டு,

சியாறங்கள் #ஏன்அவசியம்,???

சியாறங்கள் ஒரு வரலாற்று மூலதனம், மட்டுமல்ல அவை இன உறவின் அடையாளமாகவும் உள்ளன, இன்னும் ஏனைய இன சகோதரர்களால் மதிக்கப்படுகின்ற அதே வேளை அவை அவர்களால்
பிரச்சினைக் காலங்களில் கூட அழிக்கப்படவில்லை,

உதாரணமாக, கண்டி திகண கலவரங்களில் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு அருகில் இருந்த சியாறங்கள்  சிறிதளவும்  தகர்க்கப்படாது, பாதுகாக்கப்பட்டன, மட்டுமல்ல, பல்வேறு இன உறவுக்கான தளங்களாகவும், வரலாற்றுச் சான்றுகளாகவும் இவை பல இடங்களில் இன்றும்  உள்ளன,

யார் எமது வரலாற்று,எதிரிகள், ???

முஸ்லிம்வரலாற்றின் எதிரிகள்" சமய  இயக்கவாதிகளே", குறிப்பாக , மக்கள் இவற்றிற்கு மரியாதை செலுத்துவதற்காக, இதனை உடைப்பதாக்க்   காரணம் கூறுவோர், அதன் வரலாற்றைக் கவனத்திற் கொள்வதில்லை,அது பற்றிய போதிய அறிவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை,

மட்டுமல்ல,இவர்களும்  இனக்கலவர காலங்களில் சாதாரண மக்களாகிய  எம்மைப் பாதுகாக்க முன்வருவதுமில்லை,மாறாக இவர்கள் தமது  #இயக்கவெறியினால் இவற்றை உடைத்து விட்டு சமூகத்தையும்,  நிர்க்கதிக்குள்ளாக்கு கின்றனர்,

இன்னும், இவர்கள் ஒரு சமூகத்தின் வரலாற்றையும், இருப்பையும் கேள்விக்குள்ளாக்குவதற்கு எந்த அதிகாரமும் அற்றவர்கள், இவர்களுக்கான இவ் அதிகாரத்தை வழங்கியது யார்? என்பதை பொதுச் சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்,

அவசரமாகச் செய்ய வேண்டியது, 

1).இலங்கையில் உள்ள அனைத்து சியாறங்களையும், முஸ்லிம் அடையாளங்களையும், ஜம்மி யத்துல் உலமாவோ, அல்லது ஏதோ ஒரு பொது அமைப்பு பொறுப்பேற்க வேண்டும்,

2). பள்ளிவாசல்கள் தம்மால் பாதுகாக்க,   முடியாத விடத்து இதனை  இலங்கை #தொல்பொருள் #திணைக்களத்திடம் ஒப்படைக்க முடியும்,

3).இவை தொடர்பான ஆய்வுகளும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த உலமாக்களும், சமூக ஆர்வலர்களும்  முன் வர வேண்டும்,

4).இதனை அழித்து முழுச் சமூகத்துக்கும் தீங்கு விளைவிப்போர், அரச கலாசாரத்திற்கும், பொது மரபுரிமைக்கும் தீங்கு விளைவித்தவர்களாக தண்டிக்கப்பட வேண்டும்,

5), சியாறங்களினதும், முஸ்லிம் வரலாற்று அடையாளங்களினதும், பூரண தகவல் திரட்டப்படுவதுடன், அவை உள்ளூர், வெளிநாட்டு மக்களின் பார்வைக்கான இடங்களாக மாற்றப்பட வேண்டும்,

இவ்வாறான , அடையாளச் சின்னங்கள்.   இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழப்போகின்ற  எம், எதிர்கால சந்த்தியினரின் நலன் கருதி கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்,

மேற்படி விடயங்களை அவசரமாகச் செய்யாது விடின், ஒரு வரலாற்று அநாதைகளாகவே, எம் எதிர்கால சமூகத்தை நாம் விட்டுச் செல்ல  இருக்கின்றோம் என்பதே, இதன்முடிவாக அமையும்,

MUFIZAL ABOOBUCKER.
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
mufizal77@gmail.com
16:10:2018.

Sent from Samsung Mobile
..#இலங்கை #முஸ்லிம் #இருப்பும், #எதிர்காலச் #சமூகப்  #பொறுப்பும், ....

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அதன் தொன்மையுடன் தொடர்புபட்டது, அந்தவகையில் ஒவ்வொரு சமுதாயமும் தமது, புராதனங்களைப் பாதுகாக்க முனைகின்ற வேளையில் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, புராதனம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதே இப்பதிவு,

நாம் அவசரமாகச் செய்ய வேண்டியது என்ன? (இலங்கை முஸ்லிம் இருப்பும், எதிர்காலச் சமூகப் பொறுப்பும்) நாம்  அவசரமாகச் செய்ய வேண்டியது என்ன?  (இலங்கை முஸ்லிம் இருப்பும், எதிர்காலச் சமூகப்  பொறுப்பும்) Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.