இந்தியா - இலங்கை கூட்டு அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் - இந்தியப் பிரதமர் கவலை2017ம் ஆண்டில் இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு
உடன்படிக்கைக்கு அமைய கூட்டு அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படு;த்துமாறு அவர் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடில்லியின் ஹைதராபாத் மாளிகையில் நேற்று பகல் இவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இராஜதந்திர விடயங்கள் தொடர்பில் தான் கூடுதலான காலத்தை இலங்கைக்காகவே செலவிட்டிருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தான் தொடர்பிலோ இந்திய அரசாங்கம் தொடர்பிலோ ஏதாவது சந்தேகம், பிரச்சனை இருப்பின் தயக்கமின்றி கலந்துரையாடுமாறு அவர் கேட்டுள்ளார்.எனினும் இலங்கை மக்கள் மத்தியில் அப்படியான ஒரு சந்தேகமோ பிரச்சினையோ இல்லை என வலியுறுத்திய இலங்கை பிரதமர், அவ்வாறான தவறான புரிதலுக்கு ஏதாவது ஒரு காரணம் அடிப்படையாக இருக்குமானால், அது குறித்து கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார்

.இந்தியப் பிரதமர் உட்பட அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து நன்றி தெரிவித்த பிரதமர், குறிப்பிட்ட செயற்திட்டம் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தான் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த செயற்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.2015ம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பலமடைந்ததாக இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அயல்நாடான இலங்கையின் அபிவிருத்தியும் சுபீட்சமும் தமது எதிர்பார்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, கலாசார மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த உறவுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து காத்மண்டு நகரில் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போது, 2017ம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, அனைத்து பணிகளையும் மேற்கொள்வது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையை வழங்கி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க மோடி அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் இலங்கைப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல் வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதி என்பவற்றுக்கு இந்தியா வழங்கியுள்ள ஆதரவையும் அவர் பாராட்டியுள்ளார். கல்வித்துறையின் புதிய போக்குகள் தொடர்பான அறிவை இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஆதரவு வழங்குமாறு அவர் இந்தியப் பிரதமரைக் கேட்டுள்ளார்.

தாட்டப்புற மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை அமைக்கத் தேவையான நிதியுதவியை வழங்குவதாக இந்தியப் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார். இலங்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமது பூமியைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பான மோசடிகளைத் தடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தியப் பிரதரைக் கேட்டுள்ளார். தனது நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய கிரிககெட் மோசடி ஒழிப்புத் தொடர்பான செயற்தி;ட்டங்களில் பல அனுபவங்களைப் பெற்றவர் என்பதால் அவருடன் கலந்துரையாடுமாறு நரேந்திர மோதி குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்றை ஒழுங்கு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

இந்தியா - இலங்கை கூட்டு அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் - இந்தியப் பிரதமர் கவலை இந்தியா - இலங்கை கூட்டு அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் - இந்தியப் பிரதமர் கவலை Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.