முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : இன்றைய கலந்துரையாடலில் புதிய திருப்பம்..முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்த சட்டமூலம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
ஒன்று இன்று பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்காரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளன முக்கியஸ்தர்கள், முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள முஸ்லிம் தரப்பினர் சலீம் மர்சூப் அவர்களின் குழு தயாரித்த அறிக்கையை முஸ்லிம் சமூகத்தை  ஏற்றுக்கொள்ள  நிர்பந்திக்க கூடாது என வலியுருத்தியுள்ளனர்.

சலிம் மர்சூப் அவர்களின் குழு பரிந்துரைகளை முஸ்லிம் சமூகம் ஏற்றுகொள்ள முடியாது என கூறுகின்ற நிலையில் அதனை அமுல்படுத்த நிர்பந்தந்திக்க கூடாது எனவும் பயிஸ் முஸ்தபா அவர்களின் குழுவின் பரிந்துரைகளையே முஸ்லிம் சமூகம் ஏற்றுகொள்வதால் அதனையே அமுல்படுத்த வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் நீதி அமைச்சரிடம் இங்கு திட்டவட்டமாக கூறியுள்ள அதேவேளை இதனை நீதி அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

காதி நீதி­­தி­களின் தரமும் உயர்த்­தப்­பட வேண்­டு­மெ­னவும் விஷேட பொறிமுறை ஒன்றை அமைத்து  காதி நீதி­­தி­­ள்  நிய­மனம் செய்யப்பட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுள்ளது.

பெண்கள் காதி­­ளாக நிய­மிக்­கப்­­டாது காதி நீதி­மன்­றங்­களில் ஜுரி­­ளாக, ஆலோ­சனைச் சபையில் உறுப்­பி­னர்­­ளாக, விவாக பதி­வா­ளர்­­ளாக நிய­மனம் பெறு­வது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்­களின் திரு­மண வய­தெல்லை 16 ஆக இருக்க வேண்­டு­மெ­னவும் இவ்­­­துக்குக் குறைந்த பெண்­களின் திரு­மணம் விசேட தேவை நிமித்தம் நடை­பெற வேண்­டு­மென்றால் காதி நீதி­­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்­ விடயமும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சகல விடயங்களையும் பரிந்துரைகளையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை கோரியுள்ள நீதி அமைச்சர் முஸ்லிம் தரப்பினருக்கு பாதகம் ஏற்பாடாத வண்ணம் அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு முன்னர் சட்ட திருத்தத்தை கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : இன்றைய கலந்துரையாடலில் புதிய திருப்பம்.. முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : இன்றைய கலந்துரையாடலில் புதிய திருப்பம்.. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5