ஜிம் ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது.


திருகோணமலை, மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கின் உடற்பயிற்சிக் கூடம் நேற்று
தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதன் கட்டுமானப்பணிகள் கடந்த 2015ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து, குறித்த மைதானமானது இன்னமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையிலேயே குறித்த தீ விபத்து நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக உடற்பயிற்சிக் கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

தீக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் திருகோணாமலை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிம் ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது. ஜிம் ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.