அகில இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் தடம்பதித்த காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை)


இவ்வருடம் (2018) நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப்போட்டியின் 16
வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டபோட்டியில்  காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை)  03ஆம் இடத்தை சுவீகரித்துக்கொண்டது.

இப்போட்டியானது 2018.10.24 அன்று கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுரகோட்டை  உதைபந்தாட்ட சம்மேளன மைதானத்தில் கம்பளை விக்ரமபாகு  தேசியபாடசாலைக்கு எதிராக நடைபெற்றது. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியானது இரண்டு அணிகளும் எதுவித கோல்களும் பெறாத நிலையில் தண்டனை உதை மூலம் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது 3 - 1 என்ற நிலையில் காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) வெற்றிவாகை சூடியது. இவ்வணியானது தென்மாகாணத்தில் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றிக்காக ஒத்துழைத்த பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், (SDC,OBA,OGA ) உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர்களான P.K.அஜித்புஷ்பகுமார, 
A.H.M. பெரோஸ் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மதிப்புக்குரிய அதிபர் M.A.M.நஸார்(SLPS - 1) அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறார்.

தகவல்,
பாடசாலை ஊடகப்பிரிவு,
கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை).   Image may contain: 18 people, people smiling, outdoor
Image may contain: 10 people, people standing
அகில இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் தடம்பதித்த காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) அகில இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் தடம்பதித்த காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.