இசாக்டீன் மற்றும் நூர்தீன் சமீரா ஆகியோர் உயிரிழந்த விபத்தின் அப்டேட்..


-ஜே.எம். ஹபீஸ்-
கெக்கிராவ- தம்புல்ல பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்தும் 12
பேர் படுகாயமடைந்துமுள்ளனர்.(24.10.2018)

மன்டாட்டுகம என்ற இடத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் வேன் ஒன்றும் சிறிய ரக லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. விபத்தில் நேகம்பஹ பிரதேசத்தைச் சேர்ந்த சகாப்தீன் இசாக்டீன்(58), நூர்தீன் சமீரா உம்மா (46) ஆகிய இருவராகும்.

தம்புள்ள பக்கமிருந்து கெக்கிராவை நோக்கிச் சென்ற வேன் மீதே மேற்படி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறியரக லொரி மோதியுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு சிறுவர்களும் இருப்பதாகப் பொலீசார் தெரிவித்தனர். கெகிராவைப் பொலீசார் விசாரணைகளை நடத்து கின்றனர்.

இசாக்டீன் மற்றும் நூர்தீன் சமீரா ஆகியோர் உயிரிழந்த விபத்தின் அப்டேட்.. இசாக்டீன் மற்றும் நூர்தீன் சமீரா ஆகியோர் உயிரிழந்த விபத்தின் அப்டேட்.. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.