இன்று பல தரப்பாலும் எதிர்பார்க்கப்பட்ட எர்தொகானின் உரை. சாராம்சம் இது தான்.எதிர்பார்க்கப்பட்ட எர்தொகானின் உரை முடிந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அவரது உரையை எதிர்பார்த்திருப்பார்கள்.

இங்கே சமூக வலைத்தளங்களில் வீராப்பு பேசிக்கொண்டிருப்பவர்கள் “தாம் எர்தொகானின் இடத்திலிருந்தால் என்னவெல்லாம் பேசுவார்களோ அதையே அவரும் பேசவேண்டும” என்ற கற்பனையில்/ எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள்.

அதுவும் MBS தான் கொலைகாரன் அவனைப்பிடிங்கோ பிடித்து ஜெயிலில் போடுங்கோ என்று அவர் முழங்கியிருக்க வேண்டும் என்றும் பலர் எதிர்பார்த்திருப்பார்கள்.

அவரால் அப்படியெல்லாம் பேசமுடியாது.

ஏனென்றால் அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி.
அதுவும் ஒட்டமான் பேரரசின் எச்சமாக இருக்கும் துருக்கியின் ஜனாதிபதி.

அவர் இதுவரை நாட்களும் unofficial ஆக சொல்லப்பட்ட நம்பப்பட்ட விடயங்களை official ஆக சொல்லியிருக்கிறார்.

எர்தொகான் சொன்னவற்றின் சாரம் இதுதான்;

1. இது சவுதி சொல்வதைப்போல தவறுதலாக கை பட்டது போல நிகழ்ந்த மரணம் அல்ல இது நன்றாக திட்டமிடப்பட்ட கொலை.


2. இறந்த ஜமாலின் உடலை உள்ளூர்வாசியிடம் ( துருக்கியர்) கொடுத்ததாக சொல்கிறீர்களே, அந்த உள்ளூர்க்காரர் யார்? அவருடைய பெயர் என்ன? என்று சவுதி அரசை கேட்டார்.


3. குற்றம் நடந்தது துருக்கியில் என்பதால் இது தொடர்பில் கைதான 18 பேரும் துருக்கியில் விசாரிக்கப்படுவதே நியாயம் என்றதொரு கருத்தை வெளியிட்டார்.


4. இந்த கொலைக்கான கட்டளையினை பிறப்பித்தவர் யார்? இதில் வேறு நாடுகளுக்கு தொடர்புகள் உண்டா? என்பன பற்றியெல்லாம் நடுநிலையான பாரபட்சமற்ற விசாரணையொன்று இடம்பெற வேண்டும்.


5. இந்த உண்மைகளை கண்டறியும் வரை துருக்கி இந்த விடயத்தில் ஓயப்போவதில்லை.

ஒரு அரச தலைவராக இப்படித்தான் பேசமுடியும்.

ராஜதந்திர அழுத்தங்கள், சர்வதேச நெருக்குவாரங்கள் ஊடாகவே இந்த குற்றத்திற்கான தண்டனையுனையும், தகுந்த பாடத்தினையும் சவுதி அரசுக்கு வழங்க முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடகவே அவரது உரை இருந்தது.

நன்றி-  முஜீப் இப்ராஹிம்
இன்று பல தரப்பாலும் எதிர்பார்க்கப்பட்ட எர்தொகானின் உரை. சாராம்சம் இது தான். இன்று பல தரப்பாலும் எதிர்பார்க்கப்பட்ட எர்தொகானின் உரை. சாராம்சம் இது தான். Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.