பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு சவூதி ஆறு பில்லியன் டொலர் உதவி.


சென்­மதி நிலு­வையில் பாரிய பற்­றாக்­குறை உள்­ளிட்ட பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள
தெற்­கா­சிய நாடு என்ற வகையில் பாகிஸ்­தா­னுக்கு ஒரு வருட காலத்­திற்கு மூன்று பில்­லியன் டொலர் நிதி­யு­த­வி­யி­னையும், எண்ணெய் இறக்­கு­மதி செய்­ததில் செலுத்­தப்­ப­டா­துள்ள நிலு­வை­களைச் செலுத்­து­வ­தற்கு மேலும் மூன்று பில்­லியன் டொலர் கட­னு­த­வி­யி­னையும் வழங்­கு­வ­தற்கு சவூதி அரே­பியா இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக பாகிஸ்தான் வெளி­நாட்­ட­மைச்சு  தெரி­வித்­துள்­ளது.

றியா­திற்கு விஜயம் செய்­துள்ள பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான்கான் அங்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் ஆகி­யோரைச் சந்­தித்த போது இந்த இணக்கம் காணப்­பட்­டது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சவூதி அரே­பிய தலை­ந­கரில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட உயர்­மட்ட முத­லீட்டு மாநாட்­டிலும் கான் பங்­கு­பற்­றினார்.

சென்­மதி நிலு­வைக்கு உதவும் முக­மாக ஒரு வருட காலத்­திற்கு மூன்று பில்­லியன் டொலர் தொகை­யினை சவூதி அரே­பியா கையி­ருப்பில் வைத்­தி­ருப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது என பாகிஸ்தான் வெளி­நாட்­ட­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக எண்ணெய் இறக்­கு­ம­திக்­கான தாம­த­மா­கிய கொடுப்­ப­ன­வுக்­காக நிதி வசதி மூன்று ஆண்­டு­க­ளுக்கு செயல்­வ­லுவில் இருக்கும். பின்னர் அது மாற்­றத்­திற்­குட்­ப­டுத்­தப்­படும் எனவும் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கிரிக்கட் வீர­ராக இருந்து அர­சி­யல்­வா­தி­யாக மாறிய இம்ரான் கான் தலை­மை­யி­லான அர­சாங்கம் கடந்த ஜூன் மாதம் பத­விக்கு வந்­த­போது பெரி­ய­தொரு பொரு­ளா­தார நெருக்­கடி சவா­லாகக் காத்­தி­ருந்­தது.

கான் றியா­துக்கு புறப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக பாகிஸ்தான் தனது வெளி­நாட்டு நாணய இருப்பை தக்க வைத்துக் கொள்­வ­தற்கு திண­றிக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

பாகிஸ்தான் தேசிய வங்­கியின் பிந்­திய கூற்றின் பிர­காரம் பாகிஸ்தான் தற்­போது சுமார் 18 பில்­லியன் டொலர் சென்­மதி நிலுவை பற்­றாக்­கு­றை­யினை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அதே­வேளை பொது­ப­டு­கடன் 75.3 பில்­லியன் டொல­ராகக் காணப்­ப­டு­கின்­றது. அது பாகிஸ்­தானின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 27 வீத­மாகும்.

ஏற்­று­ம­தி­களை அதி­க­ரித்தல், வெளி­நாட்டு நாண­ய­மாற்று இருப்­பினை மேம்­ப­டுத்­துதல், வங்­கிகள் ஊடாக பாகிஸ்­தா­னி­யர்­களை பணம் அனுப்ப வைத்தல் போன்­ற­வையே பாகிஸ்­தானின் தற்­போ­தைய கவ­லை­யாகும் என றியாதில் நடை­பெற்ற எதிர்­கால முத­லீட்டு முன்­னெ­டுப்பு மாநாட்டு அமர்வொன்றில் உரையாற்றிய கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சவூதி அரேபியாவுடன் நெருக்கமானதும் தந்திரோபாயமானதுமான பொருளாதார உறவினைப் பேணி வருகின்றது. 1.9 மில்லியன் பாகிஸ்தானியர்கள் சவூதியில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

M.I.Abdul Nazar -Vidivelli
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு சவூதி ஆறு பில்லியன் டொலர் உதவி. பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு சவூதி ஆறு பில்லியன் டொலர் உதவி. Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.