டெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
டெங்கு என்பது எல்லோருக்கும் தெரியும் ஒரு வைரஸ் நோய் அதனை எல்லோரும் வைரஸ்
காய்ச்சல் என்று சொல்வார்கள் வைரஸ் காய்ச்சலில் பல வைரஸ் காய்ச்சலை நாம் சந்திக்கின்றோம் தடுமல், இருமல் போன்றவையும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல்தான் அதனை நாம் யாரும் பெரிதாக கவனத்திலெடுப்பதில்லை என்று கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.

டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

அதேபோன்றுதான் இன்னும்பல நோய்கள் இருக்கின்றது அது பற்றிய கவலை அந்த நோயாளிகளுக்கும் வைத்தியர்களுக்கும்தான், எனவே இந்த டெங்கு வைரஸ் காய்ச்சல் அப்படியல்ல இந்த டெங்கு வைரஸ் காய்ச்சலை நாம் இல்லாது ஒழிக்க வேண்டுமாகவிருந்தால் நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.

ஏனென்றால் டெங்குக் காய்ச்சலை உருவாக்குவது நாங்கள்தான் நாங்கள் எப்படியோ, எங்களது பழக்கங்கள் எப்படியோ, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பண்பு எப்படியோ அது டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் அல்லது டெங்குக் காய்ச்சலை அதிகரிக்கும் ஒரு பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கின்றது என்றால் அங்கே வாழுகின்ற மக்கள் அலட்சியமாக இருக்கின்றார்கள் என்பத நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த டெங்கு ஒரு நுளம்பினால் பரவுகின்றன நுளம்பு பெருகக்கூடிய இடங்களை எங்களுடைய சுற்றாடலில் நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் டெங்குக் காய்ச்சல் வரும்.
நுளம்பு பெருகின்ற இடமென்று சொன்னால் எங்களுக்கு பெரும்பாலானோர்களுக்கு என்னவென்று தெரியாது நாங்கள் ஒரு வீட்டுக்குச்சென்று டெங்கு நுளம்பினை எடுத்துக் காட்டினால் அவர்கள் கேட்கின்றார்கள் இது தெரிபுழுதானே என்று அந்த தெரிபுழுதான் டெங்கு நோய்யுடைய குடம்பி அதுதான் டெங்கு நுளம்பாக மாறுகிறது. எனவே நாங்கள் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் அந்த தெரிபுழுதான் டெங்கு நுளம்பு என்பதை.எனவே அந்த தெரிபுழுவை நாம் அழிக்கவேண்டும்.

பெரும்பாலும் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள்தான் டெங்கு நோய், டெங்குக் கிருமி தாக்கம் ஏற்பட்டு எல்லோருக்கும் டெங்குக் காய்ச்சல் வருவதில்லை தொண்ணூறு வீதமானோர்களுக்கு டெங்குக் காய்ச்சல் வருவதில்லை டெங்குக் கிருமி தாக்கம் ஏற்பட்டாலும் அதில் பத்து வீதமானோர்களுக்குதான் டெங்கு காய்ச்சல் வருகின்றது.

டெங்கு காய்ச்சலால் இதுவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழு சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவே சிறுவர்களாகிய நீங்கள் உங்களுடைய சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. டெங்கு காய்ச்சல் என்று சொல்லுகின்ற ஒரு தகவலை நீங்கள் உங்களது மனங்களில் பதிக்க வேண்டும் டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை டெங்கு காய்ச்சல் எதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் எங்களுடைய அலட்சியப் போக்கினால்தான் உதாரணமாக ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் நாங்கள் அவரைப் பராமரிக்கின்ற விடயத்தில் பிழை விடுகின்றோம் அக் காய்ச்சல் வந்தால் வீட்டில் வைத்தும் சில பராமரிப்புக்கள் செய்ய வேண்டும் வைத்தியசாலையில் வைத்தும் சில பராமரிப்புக்கள் செய்ய வேண்டும் வீட்டில் வைத்து செய்யக்கூடிய பராமரிப்பு என்று சொன்னால் அவருக்கு கூடிய அளவு ஓய்வு வழங்க வேண்டும், போதியளவு நீர் ஆகாரங்களை வழங்க வேண்டும்.

எனவே டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை முறையான வைத்தியம் செய்வதின் ஊடாக அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் எங்களுடைய பிள்ளைகளை முறையாகப் பராமரிக்காமல், வைத்தியரிடம் காட்டாமல் போதியளவு நீராகாரம் கொடுக்காமல் ஓய்வு எடுக்காமல் இருப்பதன் காரணங்களால்தான் டெங்கு காய்ச்சலால் பெரும்பாலான பிள்ளைகள் மரணிக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஏனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டுமாகவிருந்தால் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் எங்கள் வீடுகளை ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்த வேண்டும் அத்தோடு டெங்கு பரிசோதனைகளுக்காக உங்கள் வீடுகளுக்கு வருகின்ற பொதுச் சுகாதார அதிகாரிளுக்கும், ஊழியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை நீங்கள் வழங்கி இந்த கொடிய டெங்கு நோய் தாக்கத்திலிருந்து விடுபட முன்வரவேண்டும் டெங்கு காய்ச்சல் எங்களால் உருவாக்கப்படுகிறது எனவே அதனை நாங்கள்தான் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
டெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது. டெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.