(படங்கள்) மாடு குறுக்கிட்டதால், பொத்துவில் - அக்கரைபத்து பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக பலி.

இன்று  அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்த பொலிஸார் தெரிவிக்கையில்

“பொத்துவில் - அக்கரைபத்து பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞன் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மாடு ஒன்று குறுக்கிட்டுள்ளமையால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்றமையாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர் பொத்துவில் ஊரனி பகுதியைச் சேர்ந்தவர்.” என தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படங்கள்  -லவேந்திரன் குமார்
(படங்கள்) மாடு குறுக்கிட்டதால், பொத்துவில் - அக்கரைபத்து பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக பலி. (படங்கள்) மாடு குறுக்கிட்டதால், பொத்துவில் - அக்கரைபத்து பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி  பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.