முன்னூறு டெங்கு நோயாளர்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணம் செலவு செய்யப்பட்டுள்ளது .


(எச்.எம்.எம்.பர்ஸான்)
டெங்கு நோய் முன்னூறு பேருக்கு தாக்குது என்றால் நுளம்பு கடித்தவர்களின் எண்ணிக்கை
அதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் நூற்றுக்கு ஐந்து தொடக்கம் பத்து வீதமானோர் மாத்திரம்தான் டெங்கு நோயால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்று வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.

டெங்கற்ற பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வு அண்மையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

எனவே டெங்கு காய்ச்சலினால் நாங்கள் யாரையும் இழக்கத் தயாரில்லை சிறார்களாகிய நீங்கள்தான் எங்கள் பிரதேசத்தின் சொத்துக்கள் நீங்கள்தான் நாளை இவ்விடத்தில் ஒரு வைத்தியராக, கல்விமான்களாக இந்த சமூகத்தில் வர வேண்டியவர்கள்.

உங்களுடைய உயிர்களை இழப்பதென்பது யாராலும் தாங்க முடியாத ஒன்றாகவுள்ளது. எனேவே டெங்கை இல்லாதொழிக்க உங்களுடைய பங்களிப்புக்கள் அவசியம் தேவைப் படுகின்றது ஏனென்றால் உங்களுடைய உயிர்களை பாதுகாப்பதற்கும், இந்தப் பிரதேசத்தில் டெங்கு நோயை இல்லாது ஒழிப்பதற்கு அவை முக்கியமாக தேவைப்படுகிறது.

வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இவ்வாண்டு இதுவரைக்கும் முன்னூறு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களது சிகிச்சைக்காக அரசாங்கம் ஒருகோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தினை செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல இம் முன்னூறு பேருடைய குடும்பத்தில் பெற்றோர்களும் குறிப்பிட்ட காலம் தொழிலை இழந்திருக்கின்றார்கள்.

ஆகவே டெங்கு நோய் பயங்கரமான நோயாகக் காணப்படுகிறது இந் நோயினால் எமது வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முன்னூறு பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐயாயிரம் பேரும் நாட்டில் நாப்பதாயிரம் பேரும் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயை நாம் கட்டுப்படுத்த முன்வருவோமாக இருந்தால் நாட்டுக்கு காசு கொடுக்காமல் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றோம். எனவே நாம் எங்கெல்லாம் நடமாடுகின்றோமோ அந்த இடத்தில் டெங்கு பெருகும் இடங்களைக் கண்டால் கட்டாயம் அதனை அழிப்பதற்கு நாம் அனைவரும் முன்வரவேண்டும் அத்தோடு இந்த கொடிய டெங்கு நோயிலிருந்து எமது சமூகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
முன்னூறு டெங்கு நோயாளர்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணம் செலவு செய்யப்பட்டுள்ளது . முன்னூறு டெங்கு நோயாளர்களுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணம் செலவு செய்யப்பட்டுள்ளது . Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.