தலையை பந்து தாக்கியதால் இலங்கை வீரர் வைத்தியசாலையில்...


இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணிகளிற்கு இடையிலான பயிற்சி
ஆட்டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும்நிசங்கவின் தலையை பந்து தாக்கியதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தவேளை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அடித்த பந்து நிசங்கவின் தலையை தாக்கியுள்ளது.

அவர் பந்தை தவிர்க்க முயன்ற வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதும் நிசங்க ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவர் உடனடியாக தலையை பிடித்தபடி நிலத்தில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த இங்கிலாந்து அணியின் மருத்துவர் களத்திற்குள் ஓடிவந்துள்ளார். எனிகும் நிசங்க 20 நிமிடங்கள் நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்,அதனை தொடர்ந்து அவர் ஸ்டெரச்சர் மூலம் மைதானத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள அம்புலன்சின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பதும் நிசங்க சுயநினைவை இழக்கவில்லை ஆனால் கழுத்தில் வலி உள்ளதாக தெரிவிக்கின்றார் என தகவல்கள் வெளியாகின்றன.

அவர் சுயநினைவுடன் காணப்படுகின்றார் அச்சப்படுவதறகான அவசியமில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஸ்க குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பட்லர் அடித்த பந்து பதும் நிசங்கவின் தலைக்கவசத்தில் பட்டு மத்தியுசின் கையிற்கு சென்றதால் பட்லர் ஆட்டமிழந்தார் அதனை பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள் பின்னரே பதும் நிசங்கவின் ஆபத்தான நிலையை உணர்ந்திருக்கின்றனர்
தலையை பந்து தாக்கியதால் இலங்கை வீரர் வைத்தியசாலையில்...  தலையை பந்து தாக்கியதால் இலங்கை வீரர் வைத்தியசாலையில்... Reviewed by Madawala News on October 31, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.