புத்தளம் தொகுதி இழந்து நிற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம் : அலி சப்ரி ரஹீம் திடமாக அறிவிப்பு



இஹ்ஸான் பைரூஸ்
புத்தளம் மாவட்டத்தின்  புத்தளம் நகர், கொட்ராமுல்லை,தில்லையடி,பாலாவி,காரைத்தீவு,புளிச்சாக்குலம்,மாதம்பை, ஆகிய பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கட்சியின் புணரமைப்பு மற்றும் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

புத்தள மாவட்டத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்தியக்குழுவினை நிருவும் வகையில் புத்தளம் தொகுதியின் அனைத்து வட்டாரங்களுக்குமான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது அலி சப்ரி ரஹீம் கருத்துத்தெரிவிகையில் ......

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட மத்தியக்குழுவினைத்தெரிவு செய்வதற்கான அடித்தளத்தை கல்பிட்டியில் இட்டுள்ளோம். கல்பிட்டி தொகுதியில் கட்சியின் வட்டாரக்கிளைகளை நிருவியுள்ளோம். அதைப்போல் கல்பிட்டியின் பிரதான நிர்வாகத்தையும் நிருவியுள்ளோம், தற்போது புத்தள மாவட்டத்தின் ஏனையத்தொகுதிகளிலும் கட்சியின் கிளைகளை நிருவி வருகின்றோம். இந்தக்குழுக்களிலிருந்து புத்தள மாவட்டத்திற்கான தாய்க்குழுவையும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் அமைக்கவுள்ளோம்.

தற்போது அமைக்கப்பட்டுவரும் வட்டாரக்கிளைகள் ஒருப்போதும் பெயரளவில் இயங்காது.கட்சியின் வட்டாரங்களுக்கான அபிவிருத்தியின்  முழுப்பொறுப்பினையும் அந்தந்த வட்டாரங்களுக்கே வழங்குவோம்.

ஏனைய அதிகாரங்களையும் வழங்கி புத்தளம் தொகுதி இழந்து நிற்கும்  பாராளுமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம். அதற்கான அடித்தளத்தினை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இடவுள்ளோம். என திடமாகக்கூறினார்..

இந்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இல்லியாஸ், இணைப்பாளர் ஜெவ்சி, மற்றும் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
புத்தளம் தொகுதி இழந்து நிற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம் : அலி சப்ரி ரஹீம் திடமாக அறிவிப்பு புத்தளம் தொகுதி இழந்து நிற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம் : அலி சப்ரி ரஹீம் திடமாக அறிவிப்பு Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.