வேண்டுகோளாக வைக்கிறேன் ..ஊடகவியலாளர் கொல்லப்பட்ட விடயத்தில் சவூதி நாட்டையோ அல்லது
அந்த நாட்டு மக்களையோ அவமானப்படுத்தும் முறையில் பேசுவதும் எழுதுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்தப் பிரச்சினையின் காரணமாக சவூதி என்ற நாடு இல்லாமல் ஆகபோவதுமில்லை, அழியப்போவதுமில்லை.அவர்களுடைய நாடு நாடகவேதான் இருக்கப்போகின்றது

அதேநேரம் அவர்கள் நமது நாட்டுக்கு நிறையவே உதவிகள் செய்தவர்கள்,உதவி செய்து கொண்டு வருபவர்கள். இந்த நாட்டு மக்களுக்கு நிறையவே தொழில்வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கை முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் வீட்டு வசதிகள் போன்ற விடயங்களில் இன்றும் உதவி செய்து கொண்டிருப்பவர்கள்.  

இந்த நிலையில் இப்படியான இக்கட்டான நிலையில் அவர்களிடம் உதவிகளைப் பெற்ற, பெற்றுக்கொண்டுவரும் நமது நாட்டு முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் அவர்கள் செய்த நல்ல விடயங்களையும்,அவர்களின் பண்புகளையும் பகிரங்கமாக எடுத்துக்கூறி அந்த நாட்டையும் அந்த நாட்டு மக்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்த முனையவேண்டும்.

நாளை நிச்சயாமாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரலாம். அதன் பின் அவர்களின் நாட்டுக்கு சென்று என்ன முகத்தோடு நாம் உதவிகளைப் பெறுவது என்பது தர்ம சங்கடமான நிலையாக மாறலாம்

ஆகவே அந்த நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் இந்த நேரத்தில் செய்யாத உதவியும் ஒத்தாசையும் வேறு எந்த நாளில் செய்தாலும் தகாது என்பதை புரிந்து கொண்டு, அதனை மனதில் வைத்து  நடந்து கொள்வதே நமது நாட்டு முஸ்லம்களுக்கும் முஸ்லிம் பெரியார்களுக்குமான கடமையாகுமென வேண்டுகோலாக வைக்கிறேன்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.


வேண்டுகோளாக வைக்கிறேன் .. வேண்டுகோளாக வைக்கிறேன் .. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.