ஒலுவில் வை.எம்.எம்.ஏ.தலைவரக கே.றமீஸ் தெரிவு.


(எம்.ஐ.எம்.றியாஸ்)
ஒலுவில்  பிரதேசத்தின் வை.எம்.எம்.ஏ.அங்கத்தவர்கள் கலந்து கொண்ட  வருடாந்த ஒன்று
கூடல் ஒலுவில் White mahaal இல் நேற்று மாலை (21.10.2018) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப்பணிப்பாளர் கே.எல்.சுபையிர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஊடகப்பிரிவின் உறுப்பினரும் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.தலைவருமான அதிபர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் (ஜே.பி),அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எல்.கியாஸ்தீன்(ஜே.பி) கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில்   தலைவராக கே.றமீஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் ஆலோசகராக ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பஹ்றுதீன் தெரிவு செய்யப்ட்டனர்.

தலைவராக தெரிவு செய்யப்ட்ட தொழிலதிபர் கே.றமீஸ் ஒரு சமுக சிந்தனையாளராகவும் பல்வேறுபடட்ட சமுகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டும் வருகின்றார் இவர் White Mahaal Ready Power Engineering Construction நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது 2018/2019 காலத்திற்கான 15பேரைக் கொண்ட புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் வை.எம்.எம்.ஏ.தலைவரக கே.றமீஸ் தெரிவு. ஒலுவில் வை.எம்.எம்.ஏ.தலைவரக கே.றமீஸ் தெரிவு. Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.