(படங்கள்) வாழைச்சேனை அந்நூர் பாடசாலையில் முப்பெரும் சாதனையாளர்கள் கௌரவிப்பு.


-எஸ்.எம்.எம்.முர்ஷித் --
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின்
முப்பெரும் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது முப்பெரும் சாதனைகளான கிறாத் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம்பெற்ற மாணவன் எச்.எம்.வின் நாஸீம், கோலாட்டம் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்கள், 16 வயதுக்குட்பட்ட வெற்மின்டன்  போட்டியில் தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் இடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஊர்வலமும், கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.ஜுனைட் கலந்து கொண்டார்.மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், பிரதேச பாடசாலை அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஊர்வலம் வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை ஹைறாத் வீதி, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதி, வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பாடசாலையை சென்றடைந்தது.பாடசாலையில் குறித்த முப்பெரும் சாதனைகளை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பயிற்றுவித்த ஆசிரியர்களும்; கௌரவிக்கப்பட்டனர்.


(படங்கள்) வாழைச்சேனை அந்நூர் பாடசாலையில் முப்பெரும் சாதனையாளர்கள் கௌரவிப்பு. (படங்கள்) வாழைச்சேனை அந்நூர் பாடசாலையில் முப்பெரும் சாதனையாளர்கள்  கௌரவிப்பு. Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.