குருநாகல், பன்னல – அகாரவிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சியாரம் உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் . பரக்கதுல்லாஹ் கண்டனம்.குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின்
தாய்க் கிராமம் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இலங்கையை ஆட்சி செய்த ஒரேயொரு முஸ்லிம் அரசனான கலேபண்டார குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது இப்னு பதூதா இலங்கைக்கு விஜயம் செய்த இப்பிரதேசத்திற்கும் வருகை தந்திருந்தார்.

இப்னு பதூதா கண்டி நோக்கி பயணம் செய்த போது இப்பாதையினூடாக பயணம் செய்ததாகவும், இப்பிரதேசத்தில் சில சியாரங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான முஸ்லிம் வரலாற்றுடன் தொடர்புடைய பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்திருக்கும் செயல் மிக மன வருத்தத்தைத் தருகின்றது.

தொன்மையும் வரலாறும்
“””””””””””””””””””””
அகார எனும் முஸ்லிம் கிராமம் தம்பதெனியா இலங்கையின் தலைநகராக மாற்றம் பெற்ற காலத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகும்.

அக்காலப் பகுதியில் நாராவில, தும்போதர, பாந்துறாவ, பூஜ்ஜம்பொல, பம்மன, எலபடகம போன்ற பிரதேசங்களில் குடியேறிய மக்கள் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக அகர பள்ளிவாசலுக்கே வந்தனர்.

இரவிலும், அதிகாலையிலும் கால் நடையாக மக்கள் பயணம் செய்து ஜும்ஆவுக்கு வரும் அனைவருக்கும் அகார மக்கள் பகலுணவு வழங்கி மகிழ்ந்த வரலாறுகள் காணப்படுகின்றன.

இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர் நபிகளின் பரம்பரை வந்த தபஹ்தாபிஈன்களைத் தொடர்ந்து வந்தவர்கள் என கருதப்படுகின்ற்அதேவேளை, இவர்கள்
எமன் தேசத்திலுருந்து இஸ்லாத்தை போதிப்பதற்காக இலங்கை வந்த 11 பேர் அடங்கிய குழுவினரில் ஒருவரே இங்கு அடக்கட்டுள்ள செய்யது இஸ்மாயில் வலியுள்ளாவாகும்.

இங்கு வருகை தரும் பெரும்பான்மை சிங்கள சகோதரர்கள் இச்சியாரத்தை தம்பி தெய்யோ என அழைத்து இன ஒற்றுமையை வளர்த்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சியாரம் உடைப்பு
“”””””””””””””””
இப்பிரதேசத்தை இயக்கவாதிகள் எதுவித வரலாற்று அறிவுமில்லாமல் தமது கொள்கை வெறிக்காக பல நூற்றாண்டு காலம் தொன்மையான இச்சியாரத்தை உடைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தின் இருப்பு தொடர்பானது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை தேடி அது தொடர்பான வரலாறுகளைத் திரட்டும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் சியாரங்களிலிருந்து ஆரம்பிப்பதாக நிறுவுகின்றனர் .

இவ்வாறான நிலையில் எம் சமூகம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வது அனைவராலும் கண்டிக்கபட வேண்டிய ஒன்றாகும்.

பாரதூரம்
“””””””””
இலங்கையின் அடுத்த ஒரு இனக்கலவரம் இடம் பெறுமானால் இது குருநாகல் மாவட்டத்தில் இடம்பெறலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள வேளையில் இப்பிரதேசத்தில் இயங்கும் சமூகப் பார்வையற்ற சமயவாத இயக்கவாதிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருப்பது குறித்த பிரதேசத்தில் மட்டுமல்ல முழு முஸ்லிம்களுக்கும் எதிராக செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகமாகவே பர்க்க வேண்டியுள்ளது.

செய்ய வேண்டியவை
“””””””””””””””””””
குறித்த சியாரமும் நாட்டிலுள்ள ஏனைய சியாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாய நிலைக்கு முஸ்லிம் சமூகம் உள்ளாக்கப்பட்டுள்ளது.

எனவேதான் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூக அமைப்புக்களும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தத்தமது பிரதேசங்களில் காணப்படும் சியாரங்கள், தொன்மையான அடையாள சின்னங்கள் போன்றவற்றை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றேல் ஏற்கனவே தமது இருப்புத் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் பூர்வீகமற்ற சமூகமாக இலகுவாக ஒதுக்கப்பட்டுவிடுவர்.

கண்டனம்
“””””””””
குறித்த சியாரத்தும் அதன் அடையாளத்தையும் உடைத்தெறிந்தவர்கள் இந்தாட்டின் மரபுரிமைக்கும், பொதுக்கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்தவர்களாகவே கருத வேண்டும். மட்டுமல்லாது இவர்கள் எதிர்கால முஸ்லிம் இருப்புக்கான அச்சுறுத்தலை விடுக்கும் இயக்கமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறானவர்களின் வன்முறைக்குணமும், தீவிரப் போக்கும் சாதாரண முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதோடு முழுச் சமூகத்தினதும் இருப்பையும் கேள்விக்குறியாக்கி விடுவதாக கருதப்படுகின்றது.

எனவே, இதுபோன்றவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலை அனைவரும் கண்டிக்க வேண்டியது அனைவரினதும் கட்டாய கடமையாகும்.

இது தொடர்பான ஆக்கபூர்வமான பின்னூட்டல்கள் சமூகத்திற்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
ஏஎம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை

கட்டுரை தொகுப்பு - ரிஹ்மி ஹகீம்
குருநாகல், பன்னல – அகாரவிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சியாரம் உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் . பரக்கதுல்லாஹ் கண்டனம். குருநாகல், பன்னல – அகாரவிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சியாரம் உடைக்கப்பட்டது  காட்டுமிராண்டித்தனமான செயல்  . பரக்கதுல்லாஹ் கண்டனம். Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.