முந்திச்செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிள், பேருந்தின் டயரில் சிக்கியதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழப்பு.


தியகம பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கஹதுடுவ, தியகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று நபர் ஒருவர் மஹரகமவில் இருந்து ஹொரண நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கவிழ்ந்து பேருந்தின் சில்லில் சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கஹதுடுவ பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முந்திச்செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிள், பேருந்தின் டயரில் சிக்கியதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழப்பு. முந்திச்செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிள்,  பேருந்தின் டயரில்  சிக்கியதில்  பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.