'பாபுல்' உற்கொண்டவர் சடலமாக மீட்பு... (வைத்திய நிபுணர் தெரிவித்தவை)


ஹட்டன் புகையிரத நிலையத்தில் நேற்று இரவு சடலமாக மீட்கபட்ட நபர் 'பாபுல்' என்ற போதை
பொருளை உட்கொண்டமையினாலேயே உயிரியிழந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உட்கொண்ட போதைப்பொருள் தொன்டையில் சிக்குண்டமையால் சடலமாக ஹட்டன் புகையிரத நிலையத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மட்டகுளி பகுதியை சேர்ந்த சுப்பையா தர்மலிங்கம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தலவாகலை பகுதியை வசிபிடமாக கொண்டவர் எனவும் திருமணம் முடித்து கொழும்பு மட்டகுளி பகுதியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினம் தலவாகலைக்கு வருகை தந்து மீண்டும் வீடு திரும்பிய வேலையே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
'பாபுல்' உற்கொண்டவர் சடலமாக மீட்பு... (வைத்திய நிபுணர் தெரிவித்தவை) 'பாபுல்' உற்கொண்டவர் சடலமாக மீட்பு... (வைத்திய நிபுணர் தெரிவித்தவை) Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5