மாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்... விண்ணப்பித்தார் அய்யூப் அஸ்மீன்.


-பாருக் ஷிஹான் -
வடமாகாணசபையின்  பதவிக்காலம் நிறைவடைந்த   பின்னரும்  மாகாண சபை உறுப்பினர்
அய்யூப் அஸ்மீன் பொலிஸ் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

ஏலவே   வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  எதிர்க்கட்சி தலைவர் எஸ் தவராசா  ஆகியோரே பொலிஸ் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து  பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

ஆனால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் படுதொல்வி அடைந்த இவர் போனஸ் ஆசனத்தில் உறுப்பினராகி மக்களிற்கு சரியான சேவை செய்யாததன் காரணமாகவெ மக்கள் மத்தியில் அவரால் பாதுகாப்பின்றி செல்ல முடியாததன் விளைவே  குறித்த மாகாண சபை உறுப்பினர் பாதுகாப்பு கோரியுள்ளதாக  யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் விமர்சித்துள்ளார்.

சில மாதங்களில் முன்னர் மேற்குறித்த மாகாண சபை உறுப்பினர்   அமைச்சர் அனந்தி சசிதரன்   கைத்துப்பாக்கிக்கு வைத்திருக்கிறார் என மாகாணசபைக்குள் கருத்து ஒன்றினை பரப்பியதுடன் அக்கைத்துப்பாக்கிக்கான ஆதாரத்தை குறித்த மாகாண சபை உறுப்பினரால்  இறுதிவரை காண்பிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் வடமாகாணசபையின பதவிக்காலம் முடிந்ததன் பின்னரும் அய்யூப் அஸ்மீன்  பொலிஸ் பாதுகாப்பை  கோரியமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும்  மாகாண முன்னாள் முதல்வர்கள் பொலிஸ் பாதுகாப்பிற்கு விண்ணப்பிப்பது சாதாரண நடைமுறைதான் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் பொலிஸ் பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.அதே போன்று
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொலிஸ் பாதுகாப்பை பெற இடமுண்டு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு  வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்... விண்ணப்பித்தார் அய்யூப் அஸ்மீன். மாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்... விண்ணப்பித்தார் அய்யூப் அஸ்மீன். Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.