கடை மற்றும் ஆட்டோ மீது வாள்வெட்டு குழு தாக்குதல்.


-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின்
மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது.

கோண்டாவில் உப்புமடம் சந்தியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீதே நேற்றிரவு (21) ஞாயிற்றுக்கிழமை  இந்தச் சம்பவம் இடம்பெற்றதுடன்  2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட குழு  இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு கடை உரிமையாளரை மிரட்டிச் சென்றுள்ளது.

இதன் போது  வியாபார நிலையத்துக்குள் புகுந்த கும்பல் பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பல சரக்குப் பொருள்களை சிந்தி சேதாரப்படுத்திச் சென்றது. அத்துடன் வியாபார நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு அக்குழு தப்பி சென்றது என  கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கடை மற்றும் ஆட்டோ மீது வாள்வெட்டு குழு தாக்குதல். கடை மற்றும் ஆட்டோ மீது வாள்வெட்டு குழு தாக்குதல். Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.