எதிர்காலத்தில் எமது நாட்டின் தலைவராக வரக்கூடிய அனைத்துத் தகுதிகளும் வாய்த்தவர் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே.. : அலி சாஹிர் மௌலானா.


-அஷ்ரப் ஏ சமத்)
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, கொக்குவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட
விழுது நகர் மற்றும் சுபீட்சம் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்த பின் தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எண்ணக் கருவில் உருவாக்கப்பட்ட இந்த “செமட்ட செவன” (அனைவருக்கும் நிழல் வீடு) எனும் வீடமைப்புத் திட்டத்தின 141 மற்றும் 142 ஆவது மாதிரிக் கிராமங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களின் முன் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.


எனக்கு சஜித் பீரேமதாச அவர்கள் ஒரு நண்பர் மாத்திரமல்ல, பாராளுமன்றத்திலே நாங்கள் அவர்களது தந்தையுடன் அவர் ஜனாதிபதியாக இருக்கும் போதே அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவர் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். இந்தியாவில் இருந்து இந்தியப் படைகள் இங்கு வந்த நேரத்திலே எமது தீர்வுக்கு நாங்களே எமது மக்களுடன் சேர்ந்து தீர்வு காண வேண்டும் என்ற தியாக நோக்குடன் செயற்பட்டதால் தனது உயிரையும் இழந்தார். அப்படிப்பட்ட ஒரு மகான். /எனவே இப்படிப்பட்ட உயிர்த் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றெடுத்திருக்கின்ற இந்த சமாதானம் ஒரு நிலைபேறான சமாதானமாக இருக்க வேண்டும். நாங்கள் செய்கின்ற இந்த அபிவிருத்திகள் ஒரு நிலைபேறான அபிவிருத்தியாக இருக்க வேண்டும். எங்களது எல்லா அபிவிருத்திகளும் உரிய முறைப்படி உலகளாவிய ரீதியிலான அபிவிருத்திகளாக இருக்க வேண்டும். அதற்கு நிலையான சமாதானம் அமைய வேண்டும். சமாதான சகவாழ்வு அமைய வேண்டும். எங்களது அபிவிருத்தித் திட்டங்கள் அமைக்கின்ற நேரத்திலே எல்லா மக்களும் எல்லாநன்மைகளையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்று தந்தையின் வழியில் மகன் சென்று கொண்டிருக்கிறார்.

எதிர்காலத்திலே இந்த நாட்டை தலைமை தாங்கி நடாத்தக் கூடிய ஒரு தகைமை மிகுந்த இளைஞராக இருந்தாலும் பொறுமையுடன் அனைத்தையும் பார்த்து அனைத்து மக்களையும் சேர்த்து அனைத்துத் தலைவர்களினதும் ஆலோசனைகளையும் பெற்று அனைத்து மார்க்கப் பெரியார்களின் ஆசிகளையும் பெற்று நாங்கள் செயற்பட வேண்டும். அதுதான் நாங்கள் இந்த நாட்டுக்குச் செய்கின்ற ஒரு நிலைபேறான அபிவிருத்தியாக அமையும். அதன் மூலமாகத் தான் எமது மக்கள் உண்மையிலேயே அவர்கள் சமாதான சகவாழ்வுடன் வாழ முடியும்.

எங்களது அரசாங்கத்திலே நானும் நல்லிணக்க அமைச்சராக இருக்கின்றேன். இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு நல்லிணக்கத்தைச் செய்கின்ற நேரத்திலே எல்லா மக்களும் எல்லாம் பெற வேண்டும். அதாவது வீடுகள், வாழ்வாதாரத்துக்கு வழி சமைத்துக் கொடுத்தல், பொருளாதாரத்தை வளர்த்தல் என்ற அடிப்படையில் அமைச்சர் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே பாருங்கள். அவருக்குப் பக்கத்திலே ஜெசிக்கா என்ற சிறுமி இருக்கிறாள். இந்தச் சிறுமி இந்த வீட்டுத் திட்டத்திலே 21 ஆவது வீடாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பயனாளியின் குழந்தை. அந்த வீட்டைத் திறந்த நேரத்தில் அவர்களின் சொல்லாத முடியாதளவு மகிழ்ச்சியை எடுத்தக் காட்டவே ஜெசிக்காவை அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்த்தி அன்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இது உண்மையான ஒரு இதய சுத்தியுடன் மக்களை அணுகி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்

நாங்கள் பல பாராளுமன்ற அமர்வுகளில் இவருடன் இருந்திருக்கின்றோம். இவரது தந்தையுடன் எங்களது சேவைகளை ஆரம்பித்திருக்கிறோம். அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை அதாவது அவர் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் இருந்து வளர்ந்து இன்று தேசிய அமைச்சராக இருந்து சேவைகள் செய்கின்ற காலத்திலும் இவர்களுடன் நண்பர்களைப் போல் பழகி மக்களின் தேவைகளைப் புரிந்து அறிந்து சேவை செய்வதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான ஒரு மகான் இங்கு வீடுகளைத் திறக்க வருகின்ற நேரத்தில் எல்லாம் அருள் மழை பொழிந்து விடும். மயிலாம்பாள்வெளியிலே இவ்வாறான ஒரு வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க வந்த போதுநாங்கள் நனைந்து நனைந்து அந்த வீடுகளை சந்தோசமாகத் திறந்து வைத்தோம். அது போன்று தான் இன்றும் எங்கள் விழுது நகர் கிராமத்திலும் கொக்குவில் கிராமத்திலும் நாங்கள் வந்திருக்கின்ற நேரத்திலே நாங்கள் மட்டும் பேனில் இருக்கக் கூடாது வந்திருக்கின்ற அனைவரும் நல்ல முறையில் சௌகரியமாக குளு குளு என்று இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை கூட இந்த நல்ல எண்ணத்துடன் செயற்படுகின்றவர்களுக்குச் செயற்படுகின்றது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, அன்பார்ந்தவர்களே! இந்த நல்ல எண்ணத்துடன் நல்ல இதய சுத்தியுடன் நாங்கள் சேவை செய்கின்ற நேரத்தில் என்றும் மக்களுடன் சிறப்பான முறையில் வாழ முடியும். இப்படிப்பட்ட நல்லவர்கள் எமது நாட்டின் தலைவர்களாக வர வேண்டும். சாதி, மத, இன பேதங்கள் இல்லாமல் அவர்கள் சேவை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் இருக்கின்ற இந்த நாட்டிலே வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு உண்மையிலேயே இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு அனைத்து மக்களுக்குமே அனைத்தும் கிடைக்கப் பெறக் கூடியதாக நாங்கள் சேவை செய்து என்றும் இப்படிப்பட்ட தலைவர்களுடன் சேர்ந்து உழைக்க தயாராக இருக்கின்றோம் என்றும் பிரதி அமைச்சர் இதன் போது மேலும் கூறினார்.

இந் நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, மட்டக்களப்பு மாநகர சபையின் நகர பிதா சரவணபவன், ஐ. தே. க. அமைப்பாளர் மகேஸ்வரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜெயக்குமார்;, ஏறாவூர் பற்று தவிசாளர் காத்தமுத்து, மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் எமது நாட்டின் தலைவராக வரக்கூடிய அனைத்துத் தகுதிகளும் வாய்த்தவர் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே.. : அலி சாஹிர் மௌலானா. எதிர்காலத்தில் எமது நாட்டின் தலைவராக வரக்கூடிய அனைத்துத் தகுதிகளும் வாய்த்தவர் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே.. : அலி சாஹிர் மௌலானா. Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.