மின்னொளிக் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் மூன்றாம் தவணை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பிற்பாடு நடாத்தபடுதல் அவசியம். பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட்



அஹமட்
நமது பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் பொறுப்புடனும், சமூக நோக்கத்தை முன்னிறுத்தியும் செயற்பட வேண்டும். கழகங்கள் விளையாட்டினை மாத்திரம் மையப்படுத்தி செயற்படுதலின் ஊடாக எதனையும் அடைந்துகொள்ள முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை அக்/அந்நூர் மகா வித்தியாலய நலன்விரும்பிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும்
 விளையாட்டுக்கழக, இளைஞர்
கழ உறுப்பின்களுடனான சந்திப்பு நிகழ்வின் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடத்தை சுட்டிக்காட்டியிருந்தார். 

தற்போது பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான பரீட்சை நடைபெறவுள்ளது. மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகின்றனர். அத்துடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குரிய தயார்படுத்தல்கள் நடைபெறுகின்றது. இவ்வாறான வேளையில் இந்தப் பிரதேசங்களில்
இரவு நேர மின்னொளி கிரிக்கட்
சுற்றுப்போட்டிகள் நடைபெறுவது இந்த நேரத்தில் பொருத்தமற்றதாகவே நிகழ்வாக இங்குள்ள அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளர். இதனை கவனத்திற்கொள்வது மிகமுக்கியமாகும். 

மாணவர்களின் கல்வி நிலை தற்போது அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஆண் மாணவர்கள் கற்கும் வீதம் வெகுவாக குறைந்து போயுள்ளது. அப்படியான நிலையில் இரவு நேர மின்னொளிப் போட்டி இன்னும் இதற்கு வலுவூட்டுவதாகவே அமைந்துவிடுகின்றது. 

எனவே மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கழகங்களின் வகிபங்கு மிகமுக்கியமானது. கற்று அதனூடாக சமூக அந்தஸ்த்தினைப் பெற்றவர்கள் தத்மது கழகங்களில் இருப்பது கெளரவமே. எனவே கழகங்கள்
சமூக அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் போது பொறுப்புடனும், சமூக நலனை முன்னிறுத்தியே செயற்படுதல் அவசியம்.

பாடசாலைகளில் பரீட்சை நடைபெறும் காலங்களைத் தவிர்த்து இரவுநேரப் போட்டிகள் நடைபெறுவதே பொருத்தம். எனவே இதனை கருத்திற்கொண்டு கோணாவத்தை பள்ளிவாசல் தலைவர், பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை சந்தித்து இவ்விடயமாக கலந்துரையாடி பொருத்தமான தீர்வினை மாணவர்களின் நலன்கருதி பெற்றுக்கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். 

குறித்த சந்திப்பில் பாடசாலை நலன்விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு வேண்டுகோள்விடுத்தமைக்கு அமைவாகவே, பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மின்னொளிக் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் மூன்றாம் தவணை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பிற்பாடு நடாத்தபடுதல் அவசியம். பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் மின்னொளிக் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் மூன்றாம் தவணை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பிற்பாடு நடாத்தபடுதல் அவசியம். பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.