புத்­தளம் தனி நாடு இல்லை. நாட்டின் ஒரு­ப­கு­தியே ஆகும்.. நாம் குப்­பை­களை அங்கு கொண்டு போய் கொட்டி உரம், மின்­சாரம் எல்லாம் செய்வோம்.


கொழும்பில் குப்­பைகள் சேரு­வ­தற்கு வெளி­மா­வட்­டங்­களில் இருந்து கொழும்­புக்கு வரு­வோரின்
பங்­க­ளிப்பும் உள்­ளது. நாட்டின் ஒரு­ப­கு­தியே புத்­தளம். புத்­தளம் தனித்த நாடு அல்ல. குப்­பை­களை அங்கு கொண்டு சென்று அதன்­மூலம் உரம், மின்­சாரம் போன்­றவை உற்­பத்தி செய்­யப்­பட உள்­ளது என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

சர்­வ­தேச தரத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட முறை­யிலே புத்­த­ளத்தில் குப்பை சேக­ரிக்­கப்­படவுள்­ளது. இதனால் சூழ­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.


அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் இதனை குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கேள்வி: புத்­தளம் அரு­வாக்­காலு பகு­தியில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்: கொழும்­புக்கு முதலில் குப்பை எவ்­வாறு வரு­கின்­றது என சிந்­திக்க வேண்டும். கொழும்பில் குப்­பைகள் சேரு­வ­தற்கு வெளி­மா­வட்­டங்­களிலிருந்து கொழும்­புக்கு வரு­வோரின் பங்­க­ளிப்பும் உள்­ளது. நாட்டின் ஒரு­ப­கு­தியே புத்­தளம். புத்­தளம் தனித்த நாடு அல்ல. குப்­பை­களை அங்கு கொண்டு சென்று அதன்­மூலம் உரம், மின்­சாரம் போன்­றவை உற்­பத்தி செய்­யப்­பட உள்­ளது.


இதன்­மூலம் மக்­க­ளுக்கு நன்­மையே கிடைக்கும். குப்­பை­களை அந்­தந்தப் பகு­தி­க­ளி­லேயே சேக­ரிக்க முடி­யாது. அவ்­வாறு பார்த்தால் ஒவ்­வொரு பிர­தேச மக்­களும் எதிர்ப்­பு­க்களை வெளி­யிட வேண்டி வரும்.


சர்­வ­தேச தரத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட முறை­யிலே புத்த­ளத்தில் குப்பை சேக­ரிக்­கப்­பட உள்­ளது. இதனால் சூழ­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது.


 கேள்வி: ச.தொ.ச நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற 5.2 மில்­லியன் ரூபா பொது நிதி மோசடி தொடர்பில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளாரே?

பதில்: உங்­க­ளுக்கும் சந்­தோசம். எனக்கும் சந்­தோசம். நீதி­மன்­றத்தின் தீர்ப்பு தொடர்பில் விமர்­சனம் கூற­மு­டி­யாது.

கேள்வி: பெற்றோல், பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு தொடர்பில்?

பதில்: பொருட்­களின் விலை எங்கே அதி­க­ரிப்­பட்­டுள்­ளது. கடந்த அர­சாங்­கத்­துடன் ஒப்­பிடும்போது இன்­னமும் எமது அர­சாங்­கத்தில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. எரி­பொ­ருட்­களின் விலையும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தில் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக கூறு­கின்­றார்கள். கடந்த அர­சாங்­கத்தின் இறுதி தேர்தல் காலத்தில் காணப்­பட்ட பொருட்­களின் விலை­யுடன் ஒப்­பிடும் போது தற்­போது மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. ( ஒப்­பீட்டு விலைப்­பட்­டி­யலை காண்­பிக்­கிறார்)

கேள்வி: கடந்த அர­சாங்­கத்தில் உணவு பொதியின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபா­வாக இருந்­தது. ஆனால் தற்­போது 180-,200 ரூபா­வாக உள்­ளதே?

பதில் நியா­ய­மான கேள்வி. கடந்த அர­சாங்­கத்­துடன் ஒப்­பிடும்போது தற்­போது பொருட்­களின் விலைகள் குறை­வாக காணப்­ப­டு­கின்ற போதும் உண­வுப்­பொ­தி­களின் விலை அதி­க­ரித்தே காணப்­ப­டு­கின்­றது. இது­தொ­டர்பில் நுகர்வோர் அதி­கார சபை கவனம் செலுத்த வேண்டும். இதே நிலை­மைதான் எரி­பொ­ருட்­களின் விலை­யேற்­றத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. எரி­பொ­ருட்கள் விலைகள் குறைந்­தாலும் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்கள் குறைக்­கப்­ப­டு­வ­தில்லை.

கேள்வி: மின்­சார கட்­டணம் உயர்த்தப் போவ­தாக கூறப்­பட்­டுள்­ளதே?

பதில்: மின்­சார கட்­டணம் ஒரு­போதும் உயர்­வ­டை­யாது. இதற்­காக விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. சட்­டத்தின் பிர­காரம் மின்­சார கட்­ட­ணத்தை உயர்த்த வேண்­டு­மாயின் பொதுமக்­களின் ஆலோ­சனை பெற­வேண்டும். எனவே மின்­சார கட்­ட­ணத்தை உயர்த்­து­வது என்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகும்.

கேள்வி: முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி ரவீந்­திர குண­வர்­த­ன­வுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் மந்­த­க­தியில் உள்­ளது. ஜனா­தி­ப­தியின் ஆதிக்கம் இதற்கு கார­ணமா?

பதில்: 11 மாண­வர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ரவீந்­திர விஜ­ய­வர்­தன கைது செய்­யப்­பட போவ­தாக தெரி­வித்­ததைத் தொடர்ந்து ஜனா­தி­பதி தலை­மையில் விசேட அமைச்­ச­ரவை கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது பாது­காப்பு படை வீரர்­களை கைது செய்யும்போது முதலில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்து காலம் தாழ்த்­தாது உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி. க்கு ஜனா­தி­பதி அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். மேலும் குறித்த சம்­பவம் தொடர்பில் ஏனைய தரப்­பி­ன­ரிடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் படைத் தரப்­பினர் தொடர்பில் பிறகு விசா­ரணை செய்­யு­மாறும் அறி­வு­றுத்­தி­யிருந்தார்.

கேள்வி: குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த ரவீந்திர குணவர்தனவுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? சட்டம் அனைவருக்கும் சமம் அல்லவா?

பதில் சட்டம் அனைவருக்கும் சமம் தான். யுத்தத்தை வெற்றிகொண்ட படை வீரர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இராணுவ வீரர்களை வைத்து அரசியல் செய்யப்பார்க்கின்றார்கள். ஆகவேதான் இவ்விடயத்தில் பொறுமையாக கையாளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்­தளம் தனி நாடு இல்லை. நாட்டின் ஒரு­ப­கு­தியே ஆகும்.. நாம் குப்­பை­களை அங்கு கொண்டு போய் கொட்டி உரம், மின்­சாரம் எல்லாம் செய்வோம். புத்­தளம் தனி நாடு இல்லை.  நாட்டின் ஒரு­ப­கு­தியே ஆகும்.. நாம் குப்­பை­களை அங்கு கொண்டு போய் கொட்டி  உரம், மின்­சாரம் எல்லாம் செய்வோம். Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.