அபுதாபி டெஸ்ட்... பாகிஸ்தான் அபாரம். அவுஸ்திரேலியாவை 373 ஓட்டங்களால் வென்றது.


அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் vs அவுஸ்திரேலியா  இரண்டவது டெஸ்ட்
போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற பாகிஸ்தான்  537 ரன்களை  இலக்காக நிர்ணயித்து இருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி  164 ஓட்டங்கள் மட்டுமே பெற்று  ஆல் அவுட் ஆனதால் பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் அபார வெற்றி ஈட்டி உள்ளது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.

137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள்,  சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

போட்டியில் 10 விக்கட்டுக்களை எடுத்த மொகமது அப்பாஸ் போட்டி நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
அபுதாபி டெஸ்ட்... பாகிஸ்தான் அபாரம். அவுஸ்திரேலியாவை 373 ஓட்டங்களால் வென்றது. அபுதாபி டெஸ்ட்... பாகிஸ்தான் அபாரம். அவுஸ்திரேலியாவை 373 ஓட்டங்களால் வென்றது. Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.