"இதற்கு மேலும் முடியல.." இன்னும் சில மாதங்களில் கூகுள் ப்ளஸ் சேவை நிறுத்தப்படும். கூகுள் அறிவித்தது.


கூகுள் ப்ளஸ் என்ற‌ சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.

கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள் பின்னர் கூகுள் ப்ளஸை பயன்படுத்த தொடங்கினர்.

ஆனால் சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவவைகளுக்கு கூகுள் ப்ளசால் நேரடி போட்டி கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில்  கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இ

இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற‌ சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் குறைந்து வருவதாலும், தொழில்நுட்பக் கோளாறு ஆகிய காரணங்களுக்காகவே கூகுள் ப்ளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
"இதற்கு மேலும் முடியல.." இன்னும் சில மாதங்களில் கூகுள் ப்ளஸ் சேவை நிறுத்தப்படும். கூகுள் அறிவித்தது. "இதற்கு மேலும் முடியல.." இன்னும் சில மாதங்களில் கூகுள் ப்ளஸ் சேவை நிறுத்தப்படும். கூகுள் அறிவித்தது. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.