நாலக டி சில்வாவிடம் 9 மணிநேர விசாரணை ! மீண்டும் நாளை வருமாறு பணிப்பு..



வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத
புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.


மீண்டும் நாளை காலை வாக்குமூலம் அளிக்க  வருமாறு பணிக்கப்பட்டுள்ளார்.


நாலக டி சில்வாவிடம் 9 மணிநேர விசாரணை ! மீண்டும் நாளை வருமாறு பணிப்பு.. நாலக டி சில்வாவிடம் 9 மணிநேர விசாரணை ! மீண்டும் நாளை வருமாறு பணிப்பு.. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.