*புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்*
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பான சுற்றரிக்கையை இரத்து செய்யுமாறும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்விச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் கல்வியாளர்கள், சிறுவர் உளவியலாளர்கள் மற்றும் சிறுவர் நோய் சம்பந்தமான விஷேட வைத்தியர்கள் அடங்கிய நிபுணர்கள் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்* *புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்* Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.