ஏழை மேசன் பாஸ்மாா்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுக்கும் மொஹம்மட் றம்ஸியின் ( மெல்பன் மெட்டல்) திட்டம்.


(அஷ்ரப் ஏ சமத்)   
மெல்பன் மெற்றல் - நிறுவனம் நாட்டில் வாழும் வீடுகள் அற்ற 500 மேசன்
பாஸ் மாா்களை  தோ்ந்தெடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஏழை மேசன் மாா்களுக்கு 500 வீடுகளை இலவசமாக மெல்பன் மெற்றல் நிறுவனம் கட்டியெழுப்துவதற்காக ஒரு தி்ட்டம்மொன்றை வகுத்துள்ளது.

 இந்த நாட்டில் கிராமங்களில் பல மாடி வீடுகளை கட்டியெழுப்பும் மேசன் வாஸ் மாா்கள் தமக்கென்று ஒரு வீடொன்று இல்லாமல் தமது குடும்பங்களுடன் படும் கஸ்டங்களை நேரடியாக அவதானித்த மெல்பன் உருக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  மொஹம்மட் றம்ஸி  இவ்வாறான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளார்,.


ஒவ்வொரு வீடும் 12 இலட்சம் பெறுமதி வாய்ந்தது. அத்துடன் அவா்களது பிள்ளைகள் 25ஆயிரம் ருபா கொடுப்பணவு கல்வி கற்பதற்கு வசதிஅளிக்கப்படுகின்றது. 

இத் திட்டத்தின் முதலாவதாக நிர்மாணித்த வீடு இன்று(17) இலங்கை கிறிக்கட் குழுவின் முன்னால் கப்டன் குமாா் சங்கங்காரவும், மெல்பன் மெற்றல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டா் மொஹமட் றம்ஸியும்
இனைந்து திக்வல்லையில் உள்ள வத்தேகம எனும் பிரதேசததில் வாழும் ஒரு ஏழை மேசன் வாஸ் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணித்து அன்பளிப்புச் செய்தாா்கள்.

ஏழை மேசன் பாஸ்மாா்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுக்கும் மொஹம்மட் றம்ஸியின் ( மெல்பன் மெட்டல்) திட்டம். ஏழை மேசன் பாஸ்மாா்களுக்கு 500 வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுக்கும் மொஹம்மட் றம்ஸியின் ( மெல்பன் மெட்டல்) திட்டம். Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.