அரசியல் சட்டம் இவ்வாறு இருக்கும்போது, பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம் இதுதான்.


- தில்ஷான் முகம்மத் -
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது
என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வரையரை செய்துள்ளது.

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது.

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும்.

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது.

இந்த துருப்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.
அரசியல் சட்டம் இவ்வாறு இருக்கும்போது, பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம் இதுதான். அரசியல் சட்டம் இவ்வாறு இருக்கும்போது,  பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம் இதுதான். Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.