சில மாங்காய்களை திருடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு.. 30ஆம் திகதி தண்டனையை அறிவிப்பு.


அண்டை வீட்டுத் தோட்டத்திலிருந்த மாங்காய் மரத்திலிருந்து 19 மாங்காய்களைத் திருடி,
அவற்றைத் தம்வசம் வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர், தன்மீதான குற்றச்சாட்டை திறந்த நீதிமன்றத்தில் வைத்து ஒத்துக்கொண்டார்.

சந்தேகநபரான வயோதிபப் பெண்ணுக்கான தண்டனையை அறிவிப்பதற்காக, வழக்கை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்த அநுராதபுரம் பிரதான நீதவான் ஜானக சமரதுங்க, அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வயோதிபப் பெண்ணுக்குக் கட்டளையிட்டார்.

அநுராதபுரம், ​சாலியபுர ஜயந்தி கிராமத்தைச் சேர்ந்த லலிதா ஆனந்த என்ற பெண்ணே, தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டார்.

தன்னுடைய வீட்டுத்தோட்டத்திலிருந்து 19 மாங்காய்களை, மேற்படி வயோதிபப் பெண் திருடிவிட்டாரென, அண்டைவீட்டுப் பெண், அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சில மாங்காய்களை திருடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு.. 30ஆம் திகதி தண்டனையை அறிவிப்பு. சில மாங்காய்களை திருடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு.. 30ஆம் திகதி தண்டனையை அறிவிப்பு. Reviewed by Madawala News on October 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.