2025 இல் இந்து சமுத்திர பிராந்தியத்தின் மத்திய நிலையமாக இலங்கை ..

2025 இல் இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தின் மத்திய நிலையமாக இலங்கையை கட்டியெழுப்புவதே
எமது இலக்கு என பிரதமர் றனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் நேற்று ஆரம்பமான இந்து சமுத்திரம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

உலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் உரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன.

இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் வலியுறத்தினார்.

ஜனாதிபயி பிரதமர் எதிர்கட்சி தலைவர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில்40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்  கலந்து கொண்டார்கள். 
2025 இல் இந்து சமுத்திர பிராந்தியத்தின் மத்திய நிலையமாக இலங்கை .. 2025 இல் இந்து சமுத்திர பிராந்தியத்தின் மத்திய நிலையமாக இலங்கை .. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5