14 பசுமாடுகளை ஏற்றிவந்த லொறியுடன் மூவர் கைது. பொத்துவில் பொலிசார் நடவடிக்கை..


பொத்துவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 14 பசுமாடுகளை அடைத்துக் 
கொண்டுவந்த லேலண்ட் லொறியுடன் மூவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.


போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாமென பொலிசாரால் சந்தேகப்படும் அனுமதிப் பத்திரத்துடன் பிபிலை பகுதியிலிருந்து  அளவுக்கதிகமான பசுக்களை லொறியொன்றினுல் அடைத்துக்கொண்டு கல்முனைநோக்கி சென்றுகொண்டிருந்தபோது பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பகுதியில்வைத்து பொலிசாரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இரண்டு தினங்களுக்கு முன்பும் மொனறாகலைப் பிரதேசத்திலிருந்து 14 எருமை மாடுகளை அடைத்துக் கொண்டுவந்த லேலண்ட் லொறியொன்றினையும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிசார் கைதுசெய்து நீதி மன்றில் ஆஜர் செய்தனர்.

இதே தினத்தில் பொத்துவில் பிரதேசத்திலிருந்து திருடிச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25 ஆடுகளையும் சந்தேக நபரையும் அம்பாரை வாங்காமம் பகுதியிலிருந்து பொத்துவில் பெருங்குற்றப் பிரிவு பொலிசார் கைதுசெய்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ்வாறிருக்க ஏலவே கைதுசெய்யப்பட்டுள்ள வாகனத்தில் குறிக்கப்பட்டிருக்கும் இலக்க குறிப்புகள் அன்மையில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப் பட்டிருப்பட்டு பிணையில் வெளிந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவர் கொட்டபோவ பிரதேசத்தையும் ஒருவர் பக்கினிஹவெல பிரதேசவாசியுமாவர். இவர்களுக்கெதிரான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
14 பசுமாடுகளை ஏற்றிவந்த லொறியுடன் மூவர் கைது. பொத்துவில் பொலிசார் நடவடிக்கை.. 14 பசுமாடுகளை ஏற்றிவந்த லொறியுடன் மூவர் கைது. பொத்துவில் பொலிசார் நடவடிக்கை.. Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.