11 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 4 இளைஞர்கள் ஒரு வாரத்தினுள் 10 லட்சத்தை போதைக்கு செலவழித்த நிலையில், கைதானர்..


அனுராதபுரம் மிஹிந்தலை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து பணத்தினை
கொள்ளையடித்த 04 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து 11 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் முன்னர் குறித்த வர்த்தக நிலையத்தில் பணி புரிந்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்யைடித்த பணத்தில் 80 ஆயிரம் ரூபா கிடைக்க பெற்றுள்ள நிலையில் ஏனைய பணத்தொகையை சந்தேக நபர்கள் போதை பாவனைக்கு  பயன்படுத்தியுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 19 மற்றும் 26 வயதுக்குட்பட்டவர்கள்  என்பதுடன், சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
11 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 4 இளைஞர்கள் ஒரு வாரத்தினுள் 10 லட்சத்தை போதைக்கு செலவழித்த நிலையில், கைதானர்.. 11 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 4 இளைஞர்கள் ஒரு  வாரத்தினுள் 10 லட்சத்தை போதைக்கு செலவழித்த நிலையில், கைதானர்.. Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.