ரொக்கட் மாணவனை அழைத்து நிர்மாணப் பணிகளுக்காக 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு செய்த ஜனாதிபதி.


20 கிலோமீற்றர் தூரத்திற்கு அனுப்ப முடியும் என எதிர்பார்க்கப்படும் ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தின் மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சியின் எதிர்கால நிர்மாணப் பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.


கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இந்த ரொக்கட்டினை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அம்மாணவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி, அந்த ரொக்கட்டினை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவினை பெற்றுத்தருவதாகவும் அதனை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய, அதன் மேலதிக நிர்மாணப் பணிகளுக்காக முதற்கட்டமாகவே இந்த 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை விமானப் படையின் தொழிநுட்ப அதிகாரிகள் இதன்போது அழைக்கப்பட்டிருந்ததுடன், ரொக்கட்டினை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சிக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
ரொக்கட் மாணவனை அழைத்து நிர்மாணப் பணிகளுக்காக 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு செய்த ஜனாதிபதி. ரொக்கட் மாணவனை அழைத்து நிர்மாணப் பணிகளுக்காக  10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு செய்த ஜனாதிபதி. Reviewed by Madawala News on October 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.