வருமானத்தில் வரலாற்று சாதனை படைத்தது வில்பத்து தேசிய சரணாலயம்.


வில்பத்து தேசிய சரணாலய வரலாற்றிலேயே அதி கூடிய வருமானத்தை கடந்த ஆகஸ்ட் மாதம்
பெற்றுள்ளதாக சரணாலய கட்டுப்பாட்டாளர் சமல் லக்ஷமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகளால் ஒரு கோடியே 69 இலட்சம் ரூபாய் வருமானமாக பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து தேசிய சரணாலயத்தை ஆரம்பித்தது முதல் இவ்வாறான அளவு வருமானம் கிடைத்ததில்லை என சரணாலய கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய சரணாலயத்தை பார்வையிட வந்த சுமார் 8,000 தேசிய சுற்றுலா பயணிகளுக்கும், 4,500 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்பட்ட டிக்கட்கள் மூலம் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. DC
வருமானத்தில் வரலாற்று சாதனை படைத்தது வில்பத்து தேசிய சரணாலயம். வருமானத்தில் வரலாற்று சாதனை படைத்தது  வில்பத்து தேசிய சரணாலயம். Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.