பலமிழந்து இருந்த இந்திய அணியை பாகிஸ்தானுக்கு பரிச்சயமான துபாய் மண்ணில் இலகுவாக வீழ்த்தி இருக்கலாம்.. நல்ல வாய்ப்பு மிஸ் ஆச்சு.


ஆசியக் கோப்பை போட்டி தொடரில் நேற்று இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி
படுதோல்வியடைந்தது. இது குறித்து இந்தியாவின்
நியூஸ் 18 செய்திச்சேவைக்கு   அளித்த பேட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் “இது எப்படி நடந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இதை விட இந்திய அணியை வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது” என்று கூறினார்.

இதற்கு முன் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆனால் நேற்று தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பாகிஸ்தானை தலை தூக்கவிடாமல் துவம்சம் செய்தது.

“கடந்த 10 வருடங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பெரும் அழுத்தத்தோடு இந்திய அணி எதிர்கொண்டது.

மேலும் துபாய், பாகிஸ்தானின் சொந்த மைதானமாகும். துபாய் போன்ற வெப்பமான மைதானங்களில் இந்திய அணிக்கு விளையாடி பழக்கமில்லை. ஹாங்காங்கிடம் போராடியே இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வாய்ப்பை பாகிஸ்தான் எளிதாக பயன்படுத்தியிருக்க முடியும்” என்றும் யூனிஸ் தெரிவித்தார்.
பலமிழந்து இருந்த இந்திய அணியை பாகிஸ்தானுக்கு பரிச்சயமான துபாய் மண்ணில் இலகுவாக வீழ்த்தி இருக்கலாம்.. நல்ல வாய்ப்பு மிஸ் ஆச்சு. பலமிழந்து இருந்த  இந்திய அணியை பாகிஸ்தானுக்கு பரிச்சயமான துபாய் மண்ணில் இலகுவாக வீழ்த்தி இருக்கலாம்.. நல்ல வாய்ப்பு மிஸ் ஆச்சு. Reviewed by Madawala News on September 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.